வியாழன், 26 ஆகஸ்ட், 2021

Thirumana Naal







                                                 திருமணத்தின   வாழ்த்து மடல் 

                           நாளாம் , நாளாம் , திருமண நாளாம்
                           லட்சுமிக்கும்  ஆனந்துக்கும் மண நாளாம் 
                           பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவி பெருமை 
                           மகிழ்ச்சியையும், அன்பையும் ஆடையாக மாற்றிக்கொள் 
                          ,பசுமை நினைவுடன் இருமனங்களும்  பெருமை  அடையும் நாள் 
                          பெரியவர்களின் ஆசியும், நண்பர்களின் வாழ்த்தும் 
                           வாட்ஸ்  ஆப், கைபேசி  மூலம் எதிர்பார்க்கும்  நாள்.

                          ரா.பார்த்தசாரதி 
                                    
                                  
                                  
                                  
                                   
         

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

 


 Independence day 2021


சும்மா கிடைக்கவில்லை நமக்கு சுதந்திரம் 
தியாகிகளின்  தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் !

கண்ணீரும், ரத்தமும், கொடூரங்களும் கலந்த தேசமே 
 சுதந்திர தீயை உண்டாக்கியதும்   நமது  தேசமே !

தாய் நாட்டிற்கும், தியாகிகளுக்கும் முதல் வணக்கம் 
உயிர் துறந்த  தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம் !

தியாகிகளின்  உயிர் தியாகத்தினை நினைந்துகொள்விர் 
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நினைவு கொள்வீர் !

தாயின்  மணிக்கொடி  பறக்கவிட  வாரீர் 
அதனை தாழ்ந்து பணித்திட  வாரீர் !

வண்ணங்கள் பலவாயினும், எண்ணங்கள் ஒன்றே 
பறவைகள் பலவாயினும்  வானம் ஒன்றே !

தேகம்  ஒன்றானாலும் , குருதி  ஒன்றே 
பாஷைகள் பலவாயினும், தேசம் ஒன்றே !

சாதிமத வேற்றுமையை  வேரோடு ஒழித்துடுவோம் 
இந்தியன் என்ற உணர்வோடு  இருந்திடுவோம் !

தேசம் உனக்கு என்ன செய்தது என நினைக்காதே 
தேசத்திற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ! 

தேசியக் கொடி  ஏற்றி  மரியாதை செய்துடுவோம்,
தேசிய கீதம்  பாடி சுதந்திரதினத்தைக் கொண்டாடுவோம் !

வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !     வந்தே மாதரம் !

ஜெய்ஹீந்த்,          ஜெய்ஹீந்த்,             ஜெய்ஹீந்த்,

ரா.பார்த்தசாரதி 

புதன், 11 ஆகஸ்ட், 2021

Sundanthira dinam 2021

யொரு 

                                                       சுதந்திரதினம்  (2021)


எழுபத்திநான்கு  ஆண்டுகள் முடிந்து எழுபத்தைந்தாம் ஆண்டில் அடிவைக்கின்றோம்! நாட்டன் நிலைமை அறிந்து
 செயல்படுகினறோமா ?எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா? , தனிமனிதன் ஒழுக்கத்தினால்  நோய்களை எதிர்த்தோமா
  தனி ஒரு மனிதனுக்கு உண்னணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் 
எனறார்  பாரதியார். ஆனால் அவ்வுணவினை அளித்திடும் விவசாயின் 
வாழ்க்கை தரம் உயர்ந்தத்தை  அறிந்தோமா ?
பாருக்குளே நல்ல நாடு  எங்கள் பாரத நாடு, ஞானத்திலே, பரமோனத்திலே,
மனதிலே  அன்னதானத்தில் காணத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே 
உயர் நாடு.

தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் !



சும்மா கிவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா ?

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில், அநீதி எனும் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
தேசத்திலும், அந்தமான், சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

என்னதான் 75 ஆண்டுகள் முடிந்தாலும், மனிதன்  மாறனும் 
தனிஒழுக்கம்  கைக்கொண்டால் எந்த நோயினையும் அடக்கலாம் 
நமது நோய் தீர்க்கும் உடற்ப்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் 
உணவே மருந்து மனதிற்கொண்டு, சத்துணவை பின்பற்றவேண்டும் 

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி 

புதன், 4 ஆகஸ்ட், 2021

 


                          மயிலுக்கு  வாலழகு  
                          குயிலுக்கு  குரலழகு 
                          அச்சிந்திய நீ  கொள்ளையழகு !
                          குலம்  காக்க  குலம் கொடுத்த 
                          எங்கள் குலக்  கொடையே 

                          பாச்சு  சித்தப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்