வெள்ளி, 5 மார்ச், 2021

 



                                               உதிரிப்பூக்கள் 


 இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம்
 மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம்
யாரோ இறந்ததிற்கு  எங்களை மிதித்து கொல்கின்றனரே
மணமானாலும், பிணமானாலும் கடைசியில் வீசி எறிகின்றனரே !

நாங்கள் பல நிறங்களில் இருந்தாலும் எங்களுக்கு ஜாதி இல்லை
எங்களின் மணம் பலவிருந்தாலும் எங்களிடத்தில் போலி இல்லை
உதிரிப்பூவானாலும், மாலையானாலும் எங்கள் அழகே ஒரு கவர்ச்சி !
எங்களை சூடியவர்களும்  அடைவதோ பெருமிதத்தில் மகிழ்ச்சி ! 

மணமகன், மணமகள் கழுத்தில் அடையாளமாக தொங்குகிறோம்
அரசியல் தலைவர்கள் கழுத்தையும் பகடிற்காக  அலங்கரிக்கின்றோம்
பாலியில் செய்யும் வேசியும் எங்களால் தன் அழகினை காண்பிக்கிறாள்
எங்கள் நறுமணத்தை உடலுக்கு நறுமண திரவியமாய்  பூசுகிறார்கள் !

பல உதிரிப்பூக்கள் நாறுடன் சேர்த்து  பூமாலையாகிறது
சேர்த்து வைக்கும்  நாறுக்கு என்றும்  மதிப்பில்லை
 உறவையும், நட்பையும் அறியாதவனுக்கு உயர்வில்லை 
நல்லதிற்கும், கெட்டதிற்கும் பயன்படுகிறோம் என்று அறியாமலில்லை!

முதலிரவில் படுக்கையில் கிடப்போம்,மறுநாள் குப்பைத் தொட்டியில்  
காகித பூவிற்கு தரும் கவர்ச்சி  எங்கள் உண்மை தன்மைக்கு கிடைப்பதில்லை
எங்களை மிதிப்பவர்களே  நீங்கள் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை
நாங்கள் உதிர்வதே மீண்டும், பிறப்பதற்குத்தான் என்று  எவருமறியவில்லை

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக