வெள்ளி, 5 மார்ச், 2021



                           தள்ளாடிய  எழுபது 

நடை தள்ளாடியபடி தட்டி தட்டி நடந்தேன் 
தள்ளாடியபடி  மயக்கத்திலே தவறி வீழ்ந்தேன
நன்கு கைகள்  தூங்கியதால்  வீடு சேர்ந்தேன் 
தூக்கியவர்களும்  சிறுது நேரத்தில் மறைந்தனரே !


 உள்ளிருந்தே  ஓர்  குரல்  காதில் ஒலித்ததே 
 வயதானகாலத்திலே  தனியே  நடப்பது சரியா 
மூலையில் கிடந்தது ஓய்வு எடுக்க வேண்டியதானே 
இங்கு  எல்லோர்க்கும் தொல்லையாய்  இருப்பானே !
 

கத்தியில்லாமல்   நெஞ்சில் குத்திய  வார்த்தைகள் 
கண்  கலங்கி  இமையின் முடியில்  நீர் துளி நனைத்ததே 
பெண் துணையில்லாமல்  ஆணின் வாழ்வு  நரகம் 
துணை இல்லா பெண் வாழ்வு வேலியில்லா பயிராகும் !


பூவோடும்,பொட்டுடோடும்  மறைந்து போனாளே 
என் மனம்   புழுங்குவதை  யார் அறிவார் இவ்வுலகிலே
தாளா  துயரம்  தந்துவிட்டு  என்னை மறந்தாயா 
என் நிலைகண்டு  உன்னிடம் அழைத்துக்கொவாயா !







   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக