புதன், 30 செப்டம்பர், 2020
சனி, 19 செப்டம்பர், 2020
Poochudal and Semantham - Vijay and Reshmi
பூச்சூட்டல் / சீமந்த வாழ்த்து மடல்
கடவுளுக்கும் பூச்சூடல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே
கருவுற்ற மாதராசிக்கும் பூச்சூட்டல் உண்டு பாரினிலே
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும், ஏழும் தொடக்கத்தினிலே
சீர்மிகு சீமந்தமோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே !
பெண் கருவுற்று மகிழ்வதும் தாய்மையாலே
தாயாக மாறுவதும் அந்த தாய்மையாலே
இறைவன் சேய்க்காக தாயைப் படைத்தான்
தாய் சேய் உறவினை பாசத்தினால் பிணைந்தான் !
பூனேயில் வாழும் விஜய்யின் அன்பு மனைவி ரேஷ்மியாம்
அன்பும், பண்பும், பாசமும், நேசமும் கொண்டவளாம்
பூனேயில் சிறப்புடன் என்றும் வாழ்பவளாம்
இன்று, பூச்சூடலும், சீர்மிகு சீமந்தமும் நடைபெறுகின்றது
ரேஷ்மிக்கு, பூச்சூட்டல் ! வாருங்கள் ! வாருங்கள் !
பலவகை வளையல்கள் அணிவித்து மகிழ்விப்போமே,
நறுமணம் கொண்ட சந்தானம்,பன்னீர் தெளிப்போமே
பிறர்க்கும் அளித்து, தாய் சேய் வளமுற வாழ்த்துவோமே,
ஆண்டாள் நாச்சியார் திருவாய்மொழியில் குறிப்பிட்டுளார்!
செண்பகம், மல்லிகை, முல்லை, இருவாட்சியோடு
பாதிரிப்பு, செங்கழுநீர்ப்பூ, கருமுகை,குருக்கத்தி
உகந்தி,சம்பங்கி என என்பகர் கொணர்ந்து
இன்று இவை மாலையாய் ரேஷ்மிக்கு சூட்டவா !
என வில்லிபுத்தூர் கோமகள் சொன்ன பத்தே !
சீர்மிகு சீமந்தத்தில் மந்திரநீர் கொண்டு நீராட்டுவோமே
பெரியோர்கள் ஆசி கூறி தம்பதிகளை வாழ்த்துவோமே!
நண்பர்களும்,, உறவினரும், ஆன்லைனிலும் வாழ்த்துவோமே
உற்றாரும், உறவினரும் விருந்துண்டு மகிழ்வோமே!
பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே
பொன்மகள் ரேஷ்மி பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
ரேஷ்மியும், விஜய்யும், நலம்பெற வாழ்த்துவோம் அன்பாலே !
ரா.பார்த்தசாரதி
வெள்ளி, 18 செப்டம்பர், 2020
Kannadasan kavithaikal
கண்ணதாசன் கவிதைகள்
''தேசத்தை காத்திடும் வீரர்கள் தினமும்
தினமும் பொழியும் மேகங்கள்
பள்ளிப்படிப்பினில் மேதைகள்
பக்குவம் வந்ததும் ஞானிகள்
நல்ல வழிகளைத் தேடுங்கள்
புதிய உலகம் காணுங்கள்
நாளைக்கு தேசம் உன்னிடம்
நம்பிக்கை கொள்வது அவசியம்
நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள் !
பாரதியாரின் முயற்சி
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும், இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண்ண விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.
செவ்வாய், 15 செப்டம்பர், 2020
திங்கள், 14 செப்டம்பர், 2020
ஞாயிறு, 13 செப்டம்பர், 2020
நாணமோ ! காதலோ !
நாணமோ ! காதலோ !
நாணம் என்பதே பெண்ணிற்கு அணிகலம்
நாணத்தால் பெண் முகம் என்றும் சிவக்கும்
நாணத்தினால் தரை குனிந்து மௌனம் சாதிக்கும்
இனியவளே ! உன் விருப்பத்தினை கோடிட்டு காட்டுகிறாய்
கருமேகங்கள் நிலவினை மறைக்கும்
நாணமெனும் போர்வை முகம் மறைக்கும்
நாணமென்பது பெண்டிர்க்கு மேலாடையோ
இடையை மறைத்து கட்டும் நூலாடையோ
நாணம் என்பது பருவத்தின் கண்ணாடியோ
கடலில் முழுகுவதறஇவ்விரண்டும், கு ஓர் முன்னோடியோ
இலைமறை காயாய் வெளிப்படுத்தும் தன்மையோ ,
ஒன்று கலந்த நெஞ்சத்துடன் உறவாடும் தன்மையோ !
நாணத்தால் உன் முகம் காதல் மொழி பேசுமோ
முகத்தை மறைத்தாலும் என்னை நினைக்க தோனுமோ
நாமத்தினால் முகம் சிவந்து காதல் வெளிப்படுத்துமோ
அமுத நிலையடைந்து , இன்பநிலை எய்துமோ !
அச்சமும், நாணமும், காதலின் உடைமையோ
இவ்விரண்டும் நாணயத்தின் இரு பக்கமோ
காதலில் கண்கள் உறங்கிடுமோ? உறவை நாடிடுமோ
காதல் உதயமாகி ஊஞ்சல் ஆடிடுமோ !
ரா.பார்த்தசாரதி
சனி, 12 செப்டம்பர், 2020
Thirumana Vazhthukkal
திருமண வாழ்த்துக்கள்
திருமணம் என்ற பந்தத்தினால்
குடும்பம் என்ற ஒன்றிலே
இணையவிருக்கும் இந்த சிறப்பான
திருமண தின திருநாள் !
இரு உறவுகள் இதயங்களை
அன்பு பாச நேசங்களால்
இடம் மாறிக்கொள்ளும் சிறந்த
நிகழ்வே திருமண தின நாள் !
ஆனந்தம் பொங்கி நூறாண்டுகள்
நீடுழி வாழ திருமண வாழ்த்துக்கள் !
சூரியனும், சந்திரனும் சாட்சியாய் நின்று
சொந்தங்களும், பந்தங்களும்,
மகனும், மக்களும், நெருக்கமான
நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும்
பொன்னான திருமண நாள்
உங்களுக்கு சிறப்புடையதாக இருக்கட்டும் !
வெள்ளி, 11 செப்டம்பர், 2020
புதன், 2 செப்டம்பர், 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)