சனி, 7 ஜனவரி, 2017

பொங்கலோ, பொங்கல்


                               


                                           பொங்கலோ, பொங்கல்
 

செங்கதிரோன்  எழுந்திடடான் செவ்வானம்  வெடித்து 
செந்தமிழன்  எழுந்திடடான் செங்கரும்பு ஒடித்து 
மங்கையரும்,மழலைகளும் புத்தாடை உடுத்து 
மாக்கோலம் போட்டிடுவார் மணிகரத்தால் தொடுத்து,
   
உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !
உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் விழா
 பசுவிற்கும், எருதுக்கும் மக்கள் எடுக்கும்  விழா !

உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு 
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு
பசுவும் , எருதும் விவசாயியின்  முதலீடு, என அறிந்ததே
வான் பொய்த்தாலும், வாயில்லா ஜீவன் காப்பாற்றுதே !


பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,
கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,
உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

தைத்திங்கள் வரட்டும், விவசாயிக்கு தன்னம்பிக்கை தரட்டும்,
தற்கொலை முயற்சியிலிருந்து விடுபட அரசு உதவட்டும்
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே ,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 

ரா.பார்த்தசாரதி 




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக