செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஏட்டுக்குப் போட்டி




                                                       ஏட்டுக்குப் போட்டி

மனிதனே!   மூடநம்பிக்கையை கைவிடுங்கள் என்றால்
கலாசாரத்தை எப்படி கைவிட முடியும் என்பீர்கள்!
 
உங்களுடைய  பேராசையை குறையுங்கள் என்றால்
வசதியாய் வாழ்வதில் தவறென்ன என்பீர்கள்!
 
 நீங்கள் குறுக்கு வழியில் செல்லாதீர்கள் என்றால்
வாய்ப்பை பயன்படுத்தினால் தானே வளமை வரும் என்பீர்கள்!

மனிதனே ! பிறரை ஏமாற்றி பிழைக்காதீர்கள் என்றால்
அது ஏமாளிகளின் தவறு தானே என்பீர்கள்!

மனிதனே !  பிறர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள் என்றால்
வலியவன் தானே வாழ முடியும் என்பீர்கள்!
 
மனிதனே !  பொய் புரட்டு செய்யாதீர்கள் என்றால்
எல்லாரும் நல்லவரா என்று எதிர்கேள்வி கேட்பீர்கள்!

மனிதனே,  பணம் பெரிதா, பாசம் பெரிதா என்றால்
பணமே பெரிது என சொல்ல தயங்கமாட்டிர்கள்

மனிதநேயமும், மனிதாபிமானம் இருப்பதாக  நீங்கள் காட்டிக் கொண்டாலும்,
உங்கள் சுய கௌரத்தை தவிர  வேறென்ன இருக்கப் போகிறது!

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக