செவ்வாய், 17 ஜனவரி, 2017

திருப்பாவையில் திவ்விய தேசங்கள்




                                       திருப்பாவையில் திவ்விய தேசங்கள் 

     பூமி தேவியின் அவதாரமாக பிறந்தவள்  ஸ்ரீ ஆண்டாள்.
     பெரிய்யாழ்வார் கருட அம்சமாகவும், ஆண்டாளின் வளர்ப்பு
     தந்தையாகவும் இருந்தார்.

      நூற்றியெட்டு திவ்விய தேசங்களை பண்ணியிரண்டு ஆழ்வார்கள்
     .மங்களசானம் செய்துள்ளனர் .   ஆண்டாளின், திருப்பாவையும், 
      வேதத்திற்கு  சமமாக கருதப்படுகிறது !

       ஆண்டாளின் முப்பது பாடல்களிலும் 108 திவ்விய தேசங்கள் 
       மேற்கோடிட்டு காட்டியுள்ளார் என்பதை திருப்பாவை பாடல்களால் 
        மறைமுகமாகவோ,யூகமாகவோ  நேரிடையாகவோ உரைப்பதைக் 
        காணலாம் !

        முதல் பாசுரம் :  மார்கழித் திங்கள், மதிநிறைந்த நன்னாளால் 
                                            பரமபத நாராயணனைக்  குறிப்பிடுவதாகும்.

        இரண்டாம் பாசுரம் :  வையத்துவாழ்விற்காள் ,பையத்துயன்ற 
                                               பரமனடி  க்ஷிராப்திநாதனை  குறிப்பிடுவதாகும் !

      மூன்றாம் பாசுரம் :  ஓங்கியுலகலந்த உத்தமன் பேர்பாடி என்பது 
                                               திருக்கோவிலூர்  த்ரிவிக்ர பெருமாளை  
                                              குறிப்பிடுவதாகும்.

 நான்காம் பாசுரம் :     ஆழிமழை கண்ணா, என்பது திருமோகுர் 
                                                காளமேகப் பெருமாளை குறிப்பிடுவதாகும்!

ஐந்தாம் பாசுரம்:         மாயனை என்னும் பாடல் வடமதுரை மைந்தனை 
                                             குறிப்பிடுவதாகும்!

ஆறாம் பாசுரம்:           புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் என்பது 
                                           திருவரங்கத்தில் வீற்றியிருக்கும் அரங்கநாதனையே 
                                           குறிப்பிடுவதாகும்.

ஏழாம்  பாசுரம்:       கீசு,கீசு,சென்றெங்கும்,தொண்டைமானுக்கு,பெருமாள்
                                         உபதேசித்த பேச்சரவமே  திருமலை திருப்பதியாகும் !

எட்டாம் பாசுரம்:     கீழ்வானம்  என்பது காஞ்சியில் உள்ள 
                                           தேவாதிராஜனை     குறிப்பதாகும் 1

ஒன்பதாம் பாசுரம்:   தூமணிமாடத்து சுற்றும் விளக்கெறிய என்பது 
                                            திருகுடந்தையையும், அதனை சுற்றியுள்ள தஞ்சை 
                                            மணிக்கோவில்,  கூடலூர்,கபிஸ்தலம்,புள்ளம்                                                             பூதங்குடி, ஆதனுர், திருவெள்ளியங்குடி, 
                                           திருவிண்ணகர், திருநறையூர், திருச்சேறை,நாதன் 
                                          கோவில், என்று அர்ச்சையிலே தசாவதாரமாக 
                                           திவ்விய தேசங்கள் சுற்றி விளக்கு எரிகின்றது 
                                          என்று குறிப்பிடுவதாகும். 

பத்தாம் பாசுரம்:     நோற்றுச்சுவர்க்கம் என்பது, திரு இந்தள்ளுர் ,
                                         திருமங்கை மன்னனுக்கு அனுகிரகித்து,இன்ன 
                                        வண்ணம் மென்று காட்டி, அருங்காலமே தேற்றமாய் 
                                       வந்து திற, என்பதற்கு பொருத்தமாகும் !

பதின்னொன்ராம் பாசுரம் :    கற்றுககறவை என்பது திருவாலி, நாங்கூர் 
                                                            திவ்விய தேசங்களை குறிப்பதாகும்.

பன்னிரெண்டாம் பாசுரம்:    கனைத்திளம் கற்று - ஆழ்வார்  திருநகரி .

பதிமூன்றாம் பாசுரம்: புள்ளின்வாய் கிண்டானை - திருவெள்ளியன்குடி   

பதினான்காம் பாசுரம்: உங்கள் புழக்கடை தோட்டத்து   வாவியுள் என்பது 
                                                   திருவெள்ளறை 

பதினைந்தாம் பாசுரம்:    எல்லே இளங்கிளியே என்பது 
                                                     திருவாய்ப்பாடியைக்  குறிப்பதாகும் .


பதினாறாம் பாசுரம்:      நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்பது 
                                                  துவாரகாவை  குறிப்பிடுவதாகும் 

பதினேழாம் பாசுரம்:     அம்பரமே தண்ணீரே  என்பது திருத்தண்கா -காஞ்சி
                                               -  தீப ப்ரகாஸர், வேதாந்த தேசிகனை நமக்கு
                                                 அனுகிரகித்தவர் .      

பதினெட்டாம் பாசுரம்:    உந்து    மதகளிற்றன் என்பது திருவயிந்திபுரத்தை 
                                                      குறிப்பதாகும் .   

பத்தொன்பதாம் பாசுரம்: குத்துவிளக்கெறிய என்பது திருநறையூரை 
                                                         குறிப்பிடுவதாகும்.

இருபதாம் பாசுரம்:        முப்பது மூவர், என்பது  திருநீர்மலையை 
                                                   குறிப்பிடுவதாகும் .

இருப்பதொன்று  பாசுரம்:  ஏற்றகலங்கள்  என்பது திருநாராயணபுரத்தை 
                                                        குறிப்பிடுவதாகும் .

இருபத்திரெண்டாம் பாசுரம்: அங்கண்மா ஞானத்தரசர் என்பது 
                                                              திருவந்தபுரம் அனந்த பத்மநாபனை
                                                             குறிப்பதாகும்.

இருபத்திமூன்றாம் பாசுரம்:  மாரிமலை  முழைஞ்சில் என்பது 
                                                             அஹோபில சிங்கபெருமாள் 

இருப்பதினான்காம்பாசுரம்:  அன்றிவ்வுலகமளந்தாய் போற்றி என்பது 
                                                             உலகளந்த பெருமாள் - காஞ்சி 

இருபத்தைந்தாம் பாசுரம் :    ஒருத்திமகனாய் பிறந்து, என்பது 
                                                             திருச்சித்ரகூடத்தை குறிப்பதாகும் 

இருபதியாராம் பாசுரம்   :     மாலே மணிவண்ணா  என்பது 
                                                           திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்.

இருபத்தேழுவது பாசுரம்:   கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்பது
                                                           திருமாலிரும்சோலையை குறிப்பதாகும் 

இருபத்தெட்டாம் பாசுரம் :  கறவைகள் பின்சென்று என்பது 
                                                         நைமிசாரண்யத்தை குறிப்பதாகும் 

இருபத்தொன்பதாவது பாசுரம்: சிற்றம் சிறுகாலே  என்பது 
                                                                தேரழுந்தூர் ஆமருவியப்பன் .

முப்பதாம் பாசுரம்:                  வங்கக்கடல் கடைந்த மாதவனை என்பது 
                                                            ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியாரே 
                                                          குறிப்பிட்டுளார் 

                                          
                                        ஆண்டாள் திருவடிகளே சரணம் 
===================================================================

ரா.பார்த்தசாரதி




                                                            




                                      
                                                   
                                                  
                                         
    
   

ஏட்டுக்குப் போட்டி




                                                       ஏட்டுக்குப் போட்டி

மனிதனே!   மூடநம்பிக்கையை கைவிடுங்கள் என்றால்
கலாசாரத்தை எப்படி கைவிட முடியும் என்பீர்கள்!
 
உங்களுடைய  பேராசையை குறையுங்கள் என்றால்
வசதியாய் வாழ்வதில் தவறென்ன என்பீர்கள்!
 
 நீங்கள் குறுக்கு வழியில் செல்லாதீர்கள் என்றால்
வாய்ப்பை பயன்படுத்தினால் தானே வளமை வரும் என்பீர்கள்!

மனிதனே ! பிறரை ஏமாற்றி பிழைக்காதீர்கள் என்றால்
அது ஏமாளிகளின் தவறு தானே என்பீர்கள்!

மனிதனே !  பிறர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள் என்றால்
வலியவன் தானே வாழ முடியும் என்பீர்கள்!
 
மனிதனே !  பொய் புரட்டு செய்யாதீர்கள் என்றால்
எல்லாரும் நல்லவரா என்று எதிர்கேள்வி கேட்பீர்கள்!

மனிதனே,  பணம் பெரிதா, பாசம் பெரிதா என்றால்
பணமே பெரிது என சொல்ல தயங்கமாட்டிர்கள்

மனிதநேயமும், மனிதாபிமானம் இருப்பதாக  நீங்கள் காட்டிக் கொண்டாலும்,
உங்கள் சுய கௌரத்தை தவிர  வேறென்ன இருக்கப் போகிறது!

ரா.பார்த்தசாரதி

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

எதிர்காலம்




                                                                 எதிர்காலம் 

    படிக்கும்  மாணவன்  எதிர்பார்ப்பதோ  நல்ல  மார்க் 
    அறிவை விட மார்க்கை வைத்து எதிர்காலம் கணிக்கப்படுகிறதே 

   இளம் பெண்களின் கல்வியே  எதிர்காலத்தை தீர்மானிக்கிறதே 
   நல்ல ஊதியமும், நற்கணவனும் அமைந்தால்  சிறப்படைகின்றதே 

   மாத  வருமானத்தில்  சேமிக்க வேண்டிய  நிலைமை 
   அதுவே,  பிரச்சனைகளை எதிர்காலத்தில்  சமாளிக்கும் திறமை!

   அரசியல்வாதிகளும், அரசு ஊழியரும் எதிர்பாக்கும் பதவி உயர்வு 
   தன் முயற்சியின்றி, பணபலத்தால் அடையும்  இறுமாப்பு !

   நல்ல வேலை கிடைத்தால், நல்ல குடும்பம் அமைவதில்லை 
   நல்ல குடும்பம்  அமைந்தால், நல்ல ஊதியம் கிடைப்பதில்லை 

  சோம்பேறியாய் திரிபவனுக்கு எதிர்காலம் ஓர்  இருட்டறைதான் 
  கடின முயற்சியுடன் உழைப்பவனுக்கு எதிர்காலம் ஓர் பொற்காலம்!

  எங்கே  சென்றிடும் காலம், அது நம்மையும்  வாழ வைக்கும் 
  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,போன்றவை  நம்மை உயர வைக்கும்!

  எதிர்காலத்தை  நினைந்து  என்றும்  கனவு  காணாதே 
  வருவது  வரட்டும், என்று எண்ணி உழைக்கத் தவறிடாதே !  

  நாட்டின் எதிர்காலம் இளைஞ்சர்  கையில்தான் 
  திறம்பட  செயலாற்றினால் நன்மை நமக்குத்தான் !

  எதிர்காலத்தை, நினைந்து வாழ்க்கையில் சேமிக்க கற்றுக்கொள் 
  உன் குடும்பத்தை தாங்கும் தூண் என  ஓத்துக்கொள் !

  ரா,பார்த்தசாரதி

  


  
  

   

சனி, 7 ஜனவரி, 2017

பொங்கலோ, பொங்கல்


                               


                                           பொங்கலோ, பொங்கல்
 

செங்கதிரோன்  எழுந்திடடான் செவ்வானம்  வெடித்து 
செந்தமிழன்  எழுந்திடடான் செங்கரும்பு ஒடித்து 
மங்கையரும்,மழலைகளும் புத்தாடை உடுத்து 
மாக்கோலம் போட்டிடுவார் மணிகரத்தால் தொடுத்து,
   
உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !
உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் விழா
 பசுவிற்கும், எருதுக்கும் மக்கள் எடுக்கும்  விழா !

உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு 
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு
பசுவும் , எருதும் விவசாயியின்  முதலீடு, என அறிந்ததே
வான் பொய்த்தாலும், வாயில்லா ஜீவன் காப்பாற்றுதே !


பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,
கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,
உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

தைத்திங்கள் வரட்டும், விவசாயிக்கு தன்னம்பிக்கை தரட்டும்,
தற்கொலை முயற்சியிலிருந்து விடுபட அரசு உதவட்டும்
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே ,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 

ரா.பார்த்தசாரதி