வெள்ளி, 28 அக்டோபர், 2016

Deepavali 2

மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,
எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி 
வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,
இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,
புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !

வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே 
வெடியின் சப்தமும், சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பினை காண்போமே,
மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே,
சங்கு சக்கரம், புஸ்வாணப்  பூக்களின் சிதறலை கண்டு களிப்போமே !

அசுரன்  நினைவாக  நாம்   தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றோம் 
மனித உருவில் உள்ள அசுரர்களை  அழிக்க நாம் திட்டமிடுவோம்,
பார்வையற்றவர்கள் விடுதிக்கும், முதியோர் இல்லத்திற்கும்   செல்வோமே 
அவர்களுடன் இனிப்பினை பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!


ரா.பார்த்தசாரதி

Deepavali




விடியலிலே துயிலெழுந்து சடுதியில் நீராடிக்
கடையினிலே வாங்கிவந்த புத்தாடை உடுத்துப்
படையலிட்ட பண்ணியத்தைப் பக்குவமாய்த் தின்னக்
கிடைத்திடுமே இன்பமது இனிதாக நமக்கு!  
படபடவென் றேவெடிக்கும் பட்டாசைக் கண்டால்
கிடுகிடுவென் றேமகிழ்ச்சி மனவானில் ஏறும்!
விடுவிடுவென் றேயதனை வாசலிலே வைத்து
வெடித்திடவே உள்ளமதில் உற்சாகம் ஊறும்!
நரகனவன் மரணித்த நன்னாள் இந்நாளில்
சரவெடிகள் வெடித்திடுதல் மட்டும் போதாது!
மதவாதம் இனவாதம் பிடிவாதம் தவிர்த்தே
இதமான மொழிபேசி இணக்கமொடு வாழ்வோம்!
நாம்பெற்ற நன்மைதனை நானிலமும் காணக்
கூம்பாத உளம்கொண்டு ஈகைசெயல் வேண்டும்!
தாம்வாழ வழியற்று மனம்வாடு வோரைத்
தேம்பாது காத்திடுதல் செல்வத்துப் பயனே!
அண்டைஅயல் வீட்டிலுள்ளோர் நல்லுறவைப் பேணப்
பண்டிகைகள் நல்லதொரு வாய்ப்பெனவே கொள்வோம்!
தொண்டுள்ளம் கொண்டஉயர் மாந்தருமே அன்பாய்
உண்டிகொடுத் தேழைகள்தம் பசிப்பிணியைக் கொல்வோம்!

ஞாயிறு, 23 அக்டோபர், 2016



                                                                  ஜன்னல் நிலா

             பௌணர்மி    நிலவே     வானில்   தவழ்ந்து வருகின்றாய்
              எங்கள் காதலுக்கு முகவரி தந்து காட்சியளிக்கின்றாய்
              நான் உன்னைப்  பார்க்கும்போது அவள் என்னை பார்க்கின்றாள்


புதன், 19 அக்டோபர், 2016

மனம் எனும் பேய்



                                                          மனம் எனும் பேய்

        மனம் ஒரு கண்ணாடி ,
                 நமது எண்ணங்களை பிரதிபலிக்கும்,

       மனம்  ஒரு குரங்கு
                  அது எண்ணங்களை தாவ வைக்கும்

       மனம் ஒரு  நீர்க்குமிழி
                   அது  எண்ணங்களை உருவாக்கி அழிக்கும்

      மனம்  ஒரு கடல் அலை
                   அது  மாறி, மாறி  எண்ணங்களை மோத விடும்

      மனம் ஒரு அணையா நெருப்பு
                    அதில் பொறாமை என்பது கொழுந்துவிட்டு எரியும்

      மனம் ஒரு குப்பைத்தொட்டி
                    அதில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களை சேர்த்துவைக்கும்

      மனம் ஒரு  கடிவாளம் இல்லா குதிரை
                    அது தன்  விருப்பப்படியே  பறந்தோடும்

      மனம்  ஒரு கனவு உலகம்
                       கனவு உலகத்தில் அடிக்கடி சஞ்சரிக்கும்

      மனம்   ஒரு அழகின்  அடிமை
                    அழகான காட்சிகளுக்கு சரணடையும்

      மனம்  எனும் பேய்
                     மனிதனை  சுயநலமாய், தீயவற்றிற்கு அடிமையாக்கும்


     ரா.பார்த்தசாரதி

        

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நிலையாமை

நிலையாமை


நிலையாமை!

சொந்த, பந்தங்கள் யாவும் ,நன்மைக்காக  ஏற்பட்ட உறவுகள் 
 அந்தந்த நேரத்தில் முகம் காட்டும் அடையாளங்கள்
உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை!
துன்படும்போது, உறவும், நட்பும்  கண்டுகொள்வதில்ல
.நேற்று இருந்தவன்  இன்று இல்லை 
என்ற பெருமைதான் மனித வாழ்க்கை 
நிலையாய் வாழ்ந்து அனுபவிக்க பேராசை படுபவன் 
வள்ளுவனின் நிலையாமை நினைக்க தவறலாமா ?

பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும் 
சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும் 
போகும்போது கொண்டு செல்ல முடியுமா 
யார்  அனுபவிக்கிறார்கள்  என பார்க்கமுடியுமா ?

வளர்பிறை காலமும், தேய்பிறை காலமும் உண்டு,
உயர்வு,தாழ்வு  பகலிரவு போல் இருப்பதுண்டு 
.தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமல்  ஆனதே
தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழி போல் ஆனதே

 பழமையும், சிறப்பும் வாய்ந்த அரண்மனைகள், கோட்டைகள் 
இவை எல்லாம்  காலம் தின்று  அழித்த  இடங்கள் 
மிஞ்சியவைகள்  இன்று சுற்றுலா  தலங்களே 
நமது சிறப்பைக்  காக்கும் அடையாள ஏடுகளே !

இறைவா புகழ்  பெற்று வாழ்பவர்கள்  உண்டு 
செருக்கடைந்தவர்கள்  சேற்றில் புதைந்தவர்களுண்டு 
மாற்றங்கள் நிகழ்வதில்லை  என்றும் மாற்றமேயில்லை 
நிலையானது எதுவெனில், நிலையாமையை என்றறிக 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
.
.
இரவாபுகழ் பெற்று இன்னமும் வாழ்பவர்கள் 
புகழ் போதைச் சேற்றில் புதையுண்டார்கள்

.தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமலும் 
தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழியானாலும் 
பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும் 
சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும் 
 
தரை தட்டும் கப்பல்கள்
கரைசேரும் கட்டுமரங்கள்
யானைக்கும் அடி சறுக்கும்
எறும்பு ஊர கல்லும் தேயும்!.

எட்டுத் தலைமுறைக்கு
கட்டிக் காத்த செல்வங்கள்
சல்லடையில் தேக்கிய நீர் போல்
சடுதியில் மறைகிற வேகம்!

மாற்றங்கள் நிகழ்வதில்
மாற்றமேதுமில்லை
நிலையானது எதுவெனில்
நிலையாமையே என்றறிக!
 
.கங்காதரன், புதுச்சேரி.

திங்கள், 17 அக்டோபர், 2016

kannadaasan





என் பார்வையில் கண்ணதாசன் 

கவியரசு கண்ணதாசன், 1974ஆம் ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் பேரவைக்கு தலைமை தாங்க வந்தார். வந்தவர், சற்று நேரம் கழித்து வந்தமையால், எனக்கென்று ஓர் தனிமதம், அதுவே தாமதம்.என்று கூறி கவிதை பாங்குடன் கூறி, கைதட்டல் பெற்றதை நினைத்துப்பார்த்தேன்.
அன்று, கண்ணதாசன், நா.பார்த்தசாரதி ( தீபம் இதழ் ) மற்றும் புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தன் மூவரும் ஒரே மேடையில் பேசினார்கள். எண்ணிப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று ! அரங்கமே களை கட்டியது. இடை, இடையே, பரிசு அளிப்பு விழவும் நடந்தது. தேனிர் இடைவேளை வந்தது. இருபத்தொரு வயதுடைய ஒரு கல்லூரி மாணவன் அவரிடம் தேனீர் கொடுத்துவிட்டு , ஐயா, கவியரசு அவர்களே, நான் பொது அறிவிற்கான பரிசினைதான் தாங்களிடம் பெற்றேன், கவிதைக்கு அல்ல என்றேன். உடனே கவியரசு , மாணவனே, பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும்
இருந்தால்தான் என்னை போன்றவர்கள் கவிதை எழுத முடியும்.!
ஐயா, ஒரு சந்தேகம் ! தாங்கள் அத்திக்காய் , ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலில் ( பலே பாண்டியா திரைபடத்தில் ) பல காய்களை கொண்டு காய்ப்பது ஏன் ? காதலின், காதலி இடையே காய் வருவதன் காரணம் என்ன?
அதற்கு புன்சிரிப்புடன், காதலன் வெண்ணிலவைப் பார்த்து என்னை வேண்டுமானாலும் காய் , என் காதலையும், காதலியையும் காயாதே என சுருங்கச் சொல்லி தெளிவித்தார். என்னே அவரது கவி நயம்.
அன்று அவர் திறன் கண்டு, மெய்மறந்து நின்று, பரிசு பெற்ற அக்கல்லூரி மாணவனுக்கு அன்று வயது இருபத்தொன்று. ஆம், அன்று பரிசுபெற்ற மாணவன்தான் இன்று அகவை அருபத்தொன்று அடைந்த ரா.பார்த்தசாரதி, வல்லமையின் வாசகன்.
ரா.பார்த்தசாரதி 

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

உண்மை காதல்







உண்மை  காதல் 

காதல் என்பது காத்திருந்து  அன்பின்   பரிமாற்றமே 
இருவிழிகளின்  ஈரத்தை  கசியவிடுமே 
இரு இதயங்களின்  சிறகடித்து பறக்கும் எண்ணமே 
உள்ளங்கள்  ஒன்றொடுஒன்று  மனதினில் பந்தாடுமே ,

ஆயிரம் உறவுகள் வந்தாலும், எட்டா உயரத்தில் இருந்தாலும்,
தேசம் விட்டு தேசம் சென்றாலும், தேகத்தில் தேங்கியே இருந்தாலும்,
சொந்தங்களும், பந்தங்களும், பாச மழைப்  பொழிந்தாலும் 
இறுதி மூச்சு வரை  மனதினால்  ஒன்று பட்டாலும் 

காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் தழைத்தாலும் 
உள்ளத்தின் உள்ளே உறைந்து கிடைக்குமே உண்மைக்  காதல் !



 ரா.பார்த்தசாரதி

.

திங்கள், 10 அக்டோபர், 2016

சஷ்டிஅப்தபூர்த்தி வாழ்த்து மடல்



                                             ஷ்ஷடியப்தபூர்த்தி   வாழ்த்து மடல்

 ஷ்ஷடியப்தபூர்த்தி,  திரு.வாசுதேவனுக்கு 19-10-2016 நடைபெறயுள்ளது 
 நங்கநல்லூரில் உள்ள குருவாரப்பன் ஆஸ்திக சமாஜத்தில் நடக்கின்றது!

தந்தையும், மகனும் ஒரே நக்ஷ்த்திரம் (ரோகிணி) அமைவது சிறப்புடையதே,
தந்தைபோல் மகனும் சிறப்படைவான் என வரலாறு கூறுகின்றதே !

 பத்மா, வீரராகவன் (லேட்) ஐந்தாம் மகனாய் தோன்றிய வாசுதேவனே
 என்றும் சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சீரும், சிறப்புடனே !

அகவை அறுபதும், ஆயிரம் நிலவு காண்பதும் சிறப்புடையந்தன்றோ 
இவ்விழாவினை கோகுல் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ !

 சஷ்டிஅப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் 
 அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  ஆசிர்வாதமே  ஆகும் !

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !

கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !



வேலையும் செய்துகொண்டே  மற்றும் பகுதிநேர நடுவராய் (கிரிக்கெட்டில்) இருந்து நற்பெயர் பெற்றாய்,
ஒரே  மகன் நன்கு படித்து, நல்ல வேலையும் கிடைக்கப் பெற்றான் !




உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது  நட்பும், உறவும் 1


உற்றாரும், உறவினரும்  ஒன்று கூடி விருந்துண்போம்
சிறியவர்களுக்கு ஆசி  வழங்கி,பெரியவர்களின்  ஆசியை பெற்றிடுங்கள்  !


  ரா.பார்த்தசாரதி  ( பாச்சு )

veeraraghavan



வீரராகவன்

கமலா, வேதாந்தம்  தம்பதினரின்  மூத்த புதல்வரே  !
என்றும்  கடமை, பக்தி, நல்லொழுகத்தில்  சிறந்து விளங்கியவரே !

காஞ்சியில் பிறந்து,  சென்னையில்  குடிபுகுந்தாய் !
கூட்டுறவுவிலும்,  குடும்பத்திலும்  சிறந்து விளங்கினாய் !

 வாழ்கைப்போரில் என்றும் வீரராகவனாய்  திகழ்ந்தாய் !
கடமையிலும், சொந்தபந்தங்கள்  இடையே சிறந்து விளங்கினாய் !

இருக்கும்போது மனிதனை எவரும் புகழ்வதில்லை !
இறந்தபின்  எவரும்  புகழாமல்  இருப்பதில்லை.!

மகன்களுக்கும், மகள்களுக்கும்  என்றும் சிறந்த தந்தையாய்  !
தங்கைகளுக்கும், தம்பிக்கும் சிறந்த  அண்ணனாய் !

பொறுமையிலும், ஒழுக்கத்திலும்  என்றும் சிறந்து விளங்கி,
பலரது  இகழ்சிகளையும்  சுமைதாங்கி போல்  தாங்கி ,

நல்மனம் கொண்டு நற்செயல்  புரிந்தாய் !
தாய்க்கும், தாரதாரத் திர்க்கும் நல்லவனாய்   திகழ்ந்தாய் !

ஆறுக்குள் ( வீரராகவன்) என்றும்  மூன்று அடங்கும் !
பத்மா  எனும் பெயர்  விளங்கும் !

கைப்பிடித்தவள்  வாவென்று ஓர் ஆண்டிற்குள் அழைத்தாளா ?
அவள் விருப்பம் நிறைவேற பின்தொடர்ந்தாயா?

அகவை அறுபதும்  என்பதும் கடந்து சென்றவரே !
ஆரா துயரில் ஆழ்த்தி  விண்ணுலகம் அடைந்தவரே !

நான்கும் அறிந்து, நான்கு தலைமுறை  கண்டாய் !
நற்செயல் புரிந்து இரவா  புகழ்  அடைந்தாய் !

பெற்றோரை  என்றும் பணிவுடன் வணங்கிடுவோம்  !
வாழ்வில் எல்லா வளம் பெற்று  வாழ்ந்திடுவோம்!


                                                                              ரா. பார்த்தசாரதி
                                                                                 ( பாச்சு )