செவ்வாய், 31 மார்ச், 2015

மாடு மேய்க்கும் பெண்ணே


 மாடு  மேய்க்கும் பெண்ணே

ஒத்தையடிப்  பாதையில்  கொம்புடன் செல்கின்றேன்
என் பசு மாட்டை மேய்ப்பதற்கு கூடச் செல்கின்றேன்
என் பிழைப்பே  இந்த பசுமாட்டின்   வளர்ச்சி
என் வாழ்வில் என்றும் எனக்கில்லை தளர்ச்சி !
காய்ந்த மண்ணும், மேடும் தாண்டி
காட்டிற்கு  ஓட்டிச்  செல்கின்றேன் என் பசுவை
கன்றை விட்டு பசுவை  மேய்கின்றேன்
என் மகனை விட்டு  தனிமையில் ஏங்குகின்றேன் 
பசு மேய்ந்தாலும்  தன் கன்றை மறப்பதில்லை
மகன் தாயை விட்டுப் பிரிந்தாலும், தாய் மறப்பதில்லை
பசுவையும், கன்றையும்  என் வீட்டில் வளர்கின்றேன்
இரண்டையும் என் மகன்போல் வளர்க்கின்றேன் !
வளர்க்கும்போது  எந்த உறவும் சிறிது காலமே நிலைக்கும்,
பறவையும், பறக்க தெரிந்ததும், கூட்டை விட்டு விலகும்
பசு தன்  உணவை  மெல்ல அசைபோடும்
நீயோ , உன் வாழ்வின் அனுபவத்தை  அசைபோடுகிறாய் !
ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக