செவ்வாய், 31 மார்ச், 2015

மாடு மேய்க்கும் பெண்ணே


 மாடு  மேய்க்கும் பெண்ணே

ஒத்தையடிப்  பாதையில்  கொம்புடன் செல்கின்றேன்
என் பசு மாட்டை மேய்ப்பதற்கு கூடச் செல்கின்றேன்
என் பிழைப்பே  இந்த பசுமாட்டின்   வளர்ச்சி
என் வாழ்வில் என்றும் எனக்கில்லை தளர்ச்சி !
காய்ந்த மண்ணும், மேடும் தாண்டி
காட்டிற்கு  ஓட்டிச்  செல்கின்றேன் என் பசுவை
கன்றை விட்டு பசுவை  மேய்கின்றேன்
என் மகனை விட்டு  தனிமையில் ஏங்குகின்றேன் 
பசு மேய்ந்தாலும்  தன் கன்றை மறப்பதில்லை
மகன் தாயை விட்டுப் பிரிந்தாலும், தாய் மறப்பதில்லை
பசுவையும், கன்றையும்  என் வீட்டில் வளர்கின்றேன்
இரண்டையும் என் மகன்போல் வளர்க்கின்றேன் !
வளர்க்கும்போது  எந்த உறவும் சிறிது காலமே நிலைக்கும்,
பறவையும், பறக்க தெரிந்ததும், கூட்டை விட்டு விலகும்
பசு தன்  உணவை  மெல்ல அசைபோடும்
நீயோ , உன் வாழ்வின் அனுபவத்தை  அசைபோடுகிறாய் !
ரா.பார்த்தசாரதி 

வியாழன், 26 மார்ச், 2015

ராமன் எத்தனை ராமனடி



                                             ராமன் எத்தனை  ராமனடி 

     ராமன் பிறந்ததும்  நவமியிலே 
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
  பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
 ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

புனர்பூசம்  நக்ஷத்திரத்தை  ராமனின்  பிறந்த நாளாக கொண்டாடுவோமே 
 பானகமும், சுண்டலும், பருப்பும், மோரும் நிவேதனமே 
ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும் ,அவரது குணம் சிறந்ததே, 
அதிலும் அவரது  கல்யாணகுணங்கள் மிகவும் சிறப்புடையதே !

ரா.பார்த்தசாரதி  
  

சனி, 14 மார்ச், 2015

தோஷங்கள் நீக்கும் பரிகாரம்




                                               தோஷங்கள்  நீக்கும்  பரிகாரம்


   பச்சரிசி,  தேங்காய் துருவல்,   வாழைப்பழம், இந்த மூன்றையும், 

   ஒன்றாகச்  சேர்த்து பிசைந்து, புற்றுபோல் செய்து, கோவிலில், 

    நாகாத்தம்மன் சிலை  முன்போ  அல்லது புற்றின் முன்பாகவோ 

     வைத்து,   புற்றுக்கு  சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து 

    வணங்கினால் கிரக தோஷங்கள், கண் திருஷ்டியால் தடைப்படும்

    காரியங்கள் எல்லாம் தடையில்லாமல்  நடக்கும். 


    ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 13 மார்ச், 2015

Kaadali





                          காதலி,   தன் கணவனுக்கு எழுதிய கடிதம் 

                                    நட்போடு  நான்  உன்னை
                                            நெடு நாட்கள்   பார்த்திட 
                                   காதலோடு    நீ  என்னை 
                                             கணப்பொழுதும் பார்க்க 
                                   கண்டு கொண்டேன்   உந்தன் 
                                             காதலின்  ஆழத்தை 
                                    கைபிடிக்க  இன்று மனதார வருகிறேன் 
                                             காதலியாய்  உன்னை காண !

                                 

ஞாயிறு, 8 மார்ச், 2015

வல்லமை


வல்லமை


திருமதி  பவழசங்கரி ,

நீங்கள் எழுதிய உலக மகளிர் தின  கட்டுரை  மிகவும் அருமை.


ரா. பார்த்தசாரதி 

வியாழன், 5 மார்ச், 2015

Veeraraghavan



                                          திருமதி பத்மா  வீரராகவன்
                                                                    &   
                                     திரு.மாகரல் வீரவல்லி      வீரராகவன்.
                                                                                                   


.
கமலா, வேதாந்தம்  தம்பதினரின்  மூத்த புதல்வரே  !
என்றும்  கடமை, பக்தி, நல்லொழுகத்தில்  சிறந்து விளங்கியவரே !

காஞ்சியில் பிறந்து,  சென்னையில்  குடிபுகுந்தாய் !
கூட்டுறவுவிலும்,  குடும்பத்திலும்  சிறந்து விளங்கினாய் !

 வாழ்கைப்போரில் என்றும் வீரராகவனாய்  திகழ்ந்தாய் !
கடமையிலும், சொந்தபந்தங்கள்  இடையே சிறந்து விளங்கினாய் !

இருக்கும்போது மனிதனை எவரும் புகழ்வதில்லை !
இறந்தபின்  எவரும்  புகழாமல்  இருப்பதில்லை.!

மகன்களுக்கும், மகள்களுக்கும்  என்றும் சிறந்த தந்தையாய்  !
தங்கைகளுக்கும், தம்பிக்கும் சிறந்த  அண்ணனாய் !

பொறுமையிலும், ஒழுக்கத்திலும்  என்றும் சிறந்து விளங்கி,
பலரது  இகழ்சிகளையும்  சுமைதாங்கி போல்  தாங்கி ,

நல்மனம் கொண்டு நற்செயல்  புரிந்தாய் !
தாய்க்கும், தாரதாரத் திர்க்கும் நல்லவனாய்   திகழ்ந்தாய் !

ஆறுக்குள் ( வீரராகவன்) என்றும்  மூன்று அடங்கும் !
பத்மா  எனும் பெயர்  விளங்கும் !

கைப்பிடித்தவள்  வாவென்று ஓர் ஆண்டிற்குள் அழைத்தாளா ?
அவள் விருப்பம் நிறைவேற பின்தொடர்ந்தாயா?

அகவை அறுபதும்  என்பதும் கடந்து சென்றவரே !
ஆரா துயரில் ஆழ்த்தி  விண்ணுலகம் அடைந்தவரே !


நான்கும் அறிந்து, நான்கு தலைமுறை  கண்டாய் !
நற்செயல் புரிந்து இரவா  புகழ்  அடைந்தாய் !

பெற்றோரை  என்றும் பணிவுடன் வணங்கிடுவோம்  !
வாழ்வில் எல்லா வளம் பெற்று  வாழ்ந்திடுவோம்!


ரா.பார்த்தசாரதி 

செவ்வாய், 3 மார்ச், 2015



  
              சிவராத்திரி 


சினமெமைத் தீண்டா நிற்கச்
சிரமதில் கனதி போகப் 
பரமனின் பாதம் பற்றிப்
பணிந்துமே நிற்போம் என்றும்!              

மனிதராய் வாழ வேண்டில்
மனமதில் தூய்மை வேண்டும்
புனிதராய் இருக்க வேண்டில்
போற்றுவோம் பரமன் தன்னை!

ஆணவம் தமக்குள் ஏற
அனைத்தையும் மறந்தே நின்ற
மாலொடு பிரமன் தானும்
மதிகெட்ட செயலைச் செய்தார்!

கடவுளர் தாமே என்று
கங்கணம் கட்டி நின்று
அழிவினைத் தேடும் வண்ணம்
அவர்நிலை ஆயிற் றன்றோ?

ஆணவம் அழிக்க அங்கே
அளவிலா ஜோதி தோன்றிக்
காணுங்கள் ஆதி அந்தம்
கடவுளாய் ஆவீர் நீங்கள்

என்ற அச்சேதி கேட்டு
இருவரும் முயற்சி செய்துப்
பன்றியாய் பட்சி ஆகிப்
பற்பல வித்தை செய்தார்!

வென்றவர் யாரு மின்றி
விக்கித்து நின்ற போது
அங்குமே சிவனும் தோன்றி
ஆணவம் போக்கி நின்றார்!

என்றுநாம் அறியும் வண்ணம்
இயம்பிடும் புராணம் தன்னை
நன்றுநாம் கற்றோம் ஆனால்
நாமுமே திருந்தி வாழ்வோம்!

மனங்களில் அழுக்கு வந்தால்
மாயையே தோன்றி நிற்கும்
குணமெலாம் மாறிப் போகும்
குறைகளே குவிந்து நிற்கும்!

அறமெலாம் மறந்தே போகும்
ஆணவம் ஆட்சி செய்யும்
அரனது நாமம் கூட
அனைவரும் மறந்தே போவர்!

சிவனது இரவு தன்னில்
அவனையே மனதில் எண்ணி
பவவினை போக்கு என்று
பணிவுடன் வேண்டி நிற்போம்!

நீறு அணிந்த நெற்றியொடு
ஆறு அணிந்த சடையுடையான்
பேறு தனைப் பெற்றுவிட
கூறி நிற்போம் அவன்நாமம்!

சிவனது நோக்குப் பட்டால்
தெளிவுமே வந்து நிற்கும்
உளமெலாம் தூய்மை ஆகி
உமைபாகன் பக்கம் சேரும்!

தவமுடன் சிவனை எண்ணித்
தலைமீது கையை வைத்துச்
சிவனைநாம் வணங்கி நிற்போம்
சிவனது இரவு தன்னில்!