புதன், 22 ஜனவரி, 2014

எம்.ஆர் . ஸ்ரீநாத் திருமண வாழ்த்துமடல்

                                                        திருமண வாழ்த்துமடல்

மணமகன் :  எம்.ஆர் . ஸ்ரீநாத்                                                    இடம் : சென்னை 
மணமகள் :  ரெணிகா                                                                   தேதி  :  23-01-2014

1.  இன்று  ஸ்ரீ   லக்ஷ்மி  ப்ரசன்ன மஹாலில்  ஓர்  கல்யாணமேடை ,
     திருமதி. ரெனிகா ( மோனிக்கா), திரு. ஸ்ரீநாத்தின்(பாலாஜி)கல்யாணமேடை!

2. வாழ்கைத்துணைநலம்   நாடும்  ஸ்ரீநாத்  எனும்  ஆடவனே,
     என்றும்  அமெரிக்காவில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !

3. கல்யாணம்  என்றாலே   வைபோகமே ,
     வாரணமாயிரம்  பாடியும்  வாழ்த்துவோமே !

4.  திருமதி  ஓஒரு  வெகுமதி  என்று அழைப்பது  வழக்கம்,
     திருமதியின்  பெயரோ ரெணிகா (அ) மோனிகா என்று அழைப்பது பழக்கம் !

5. மலர்போன்ற  மலர்கின்ற மனம் வேண்டும்  நற்பெண்ணே,
    மண்வாசனை  மாறாத  குணம் வேண்டும் மணப்பெண்ணே !

6. மணந்து  நின்றே புகழ் பரப்பி என்றும் மணமக்கள் 
    மலர்போல  மணம்  வீசி  இல்லறத்தில் வாழ்தல் வேண்டும்!

7.   இல்லறம்தான்  திருமணத்தின்  தொடக்கமாகும்
      இதற்குள்ளே  எல்லாமே  அடக்கமாகும் !

8.  மனைவி என்றாலே  மாண்பு  சேர்பவளே,
      வீட்டை  வெள்ளிச்சமாக்கும் விளக்காய்  இருப்பவளே !

9. கணவன் என்றாலே  கண் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள் மனைவியாகும்!

10. பிறந்த வீட்டின்  குலம்  காக்கவேண்டும்,
      புகுந்த  வீட்டின்  நலம்  காக்க வேண்டும் !

11. காலங்களும் , காட்சிகளும்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!

12. மணமக்கள்  ஏற்பதோ  நல்வாழ்த்தும், நல்லாசியே !
       அகிலத்தில் சிறந்தது  பெற்றோரின்  ஆசியே !

13. வாழ்க்கைத்துணை  ஒன்றே  மனைவி  தன்னை,
      வள்ளுவரும்  சிறப்பாக சொல்லி வைத்தாரே !

14. மணமக்கள் வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்,
       வேற்றுமையில்  ஒற்றுமை  கண்டு  விருந்துண்போம் !

                                                                                ரா. பார்த்தசாரதி - 9884116452
                                                               
    

திங்கள், 20 ஜனவரி, 2014

சனி, 18 ஜனவரி, 2014

கண்கண்ட தெய்வம் பாபா

                                                  கண்கண்ட  தெய்வம் பாபா
 
கிழக்கிலே  ராமகிருஷ்ண பரமஹம்சர்  தோன்றினாரே 
தெற்கிலே  ரமணமகரிஷி , ராமலிங்க ரும் தோன்றினரே
மேற்கில்  ஒரு  ஷீரடி  பாபா  தோன்றினாரே 
அவணியிலே  தெய்வ அருள்பெற்றனரே !

ஷீரடிலே  ஓர்   ஷீரடி  பாபா ,
சாந்தமும்,  அன்பின்  உருவமே பாபா,
சாய்பாபாவின்  கருணை  கவலைகள் தீர்க்குமே ,
சமரசமும், தெய்வீகமும்   கொண்ட   ரூபமே !

அவர்  அடிமலரே  நமக்கு  சரணாலையம் 
அவர்   மக்களின்  மனதில்   நெஞ்சில் ஓர்  ஆலயம்,
அவர் கமலபாதம்  பணிந்தாலே பாவங்கள் தீருமே 
அவரை அனுதினம் வழிபட்டாலே நன்மை அடைவோமே !

பாபாவின்  பாதமே  நமக்கு  துணை 
அவர்  நாமம்  சொல்வதே உற்றத்துனை 
அன்பே கடவுள் , அருளே  அவர் வடிவம்.
அவரே  ஞாலத்தின்  கண்கண்ட  தெய்வம்!


ரா. பார்த்தசாரதி

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பொங்கலின் வண்ணக்கோலங்கள்

                                         பொங்கலின்  வண்ணக்கோலங்கள்

                                புள்ளியிலே  ஆரம்பித்து  புள்ளியிலே        
                                                   முடியும்    புள்ளிக்  கோலங்கள்,
                                
                                கோடுகளை  இணைத்துப்  போடும் கோலங்கள்,
                                புதுமையாக  நாம் காணும்  வடிவங்கள் !
                              
                                கோலங்கள்   பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,
                                அதுவே  பெண்களுக்குரிய  கை  வண்ணங்கள் !

                                இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,
                                 மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்கள் !

                                 காலங்களும், கோலங்களும் என்றும் மாறும்,
                                 கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

                                 
                                 இல்லத்தில்  கோலம்  போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்
                                  மனித  வாழ்கையில் சலனம் போக்குவதே  தெய்வதரிசனம் ! 

                                 வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
                                 இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!

                                 பொங்கலன்று  சென்னையில் பல வண்ண கோலங்கள,
                                  மனிதனின்  மனதில் தோன்றிடுமே  நல்ல  எண்ணங்கள் !

                                 ரா. பார்த்தசாரதி