திங்கள், 24 ஆகஸ்ட், 2020
therthal kavithai
ஓட்டு திருடர்களே
சீக்கிரம் வாருங்கள்
எங்கள் ஓட்டு விற்பனைக்கு
காத்துக் கிடக்கிறது!
காத்துக் கிடக்கிறோம்
காத்துக் கிடக்கிறோம்
திருடர்கள் எப்போது
கதவை தட்டுவர் என்ற ஏக்கத்தில்!
முன்பு திருடர்களுக்கு பயந்து
கதவை மூடுவோம்...
இன்று
திருடர்கள் வருகைக்காக
காத்துக் கிடக்கிறோம்!
தெரியாமல் வரும் திருடனை
அடித்து விரட்டுகிறோம்...
தெரிந்தே வரும் திருடனுக்கு
ஆரத்தி எடுக்கிறோம்!
ஐந்து நாள் பணத்திற்கு ஆசைப்பட்டு
ஐந்து ஆண்டு நாட்டை
அடகு வைக்க காத்து கிடக்கிறோம்!
வழி விடுங்கள் வழி விடுங்கள்
காவலரின் துணையோடு
கயவர்கள் வருகின்றனர்
வழி விடுங்கள்!
கயவர்கள் என்று தெரிந்தும்
கதவை திறந்து விட
தேர்தல் வந்ததே
Sattray Senthiyungal
சற்றே சிந்தித்துப் பாருங்கள் !
- ஞானத்தை வளர்த்துகொள்ளுங்கள்
அது சக்தியின் பிறப்பிடமாகும் !
- கடவுளின் அருளை வேண்டுங்கள்
அது பக்தியின் இருப்பிடமாகும் !
- தியானம் செய்ய விரும்புங்கள்
அது மனஅமைதியின் உறைவிடமாகும் !
- யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
அது உணர்சிகளை நிலைநிறுத்தும் இடமாகும் !
- நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்
அது அறிவு எனும் ஊற்று தோன்றும் இடமாகும்
\6 உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் , முத்திரையையும்
மூச்சு பயிற்ச்சி கலைகளையும் தினமும் கடைபிடியுங்கள
அது கொணரா வைரஸை எதிர்க்கும் இடமாகும்,
\6 உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் , முத்திரையையும்
மூச்சு பயிற்ச்சி கலைகளையும் தினமும் கடைபிடியுங்கள
அது கொணரா வைரஸை எதிர்க்கும் இடமாகும்,
-
வாழ்வில் பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்
எதிர் காலத்தில் உன்னை தாங்கும் தூண்னாகும் - பிறர்க்கு நல்லதை செய்ய நினையுங்கள்
அது உன் புகழினை பரப்பும் இடமாகும்
10 நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
10 நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
அது உன் நேர்மைக்கு இடமாகும்
11. சிரித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்
11. சிரித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்
அது நோயினை நீக்கும் மருந்தாகும் !
ஆம்,
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான் !!
ரா. பார்த்தசாரதி
ரா. பார்த்தசாரதி
Kadal
காதல்....
அழகைப் பார்த்து
காதலிப்பதா
காதல்...
ஆளைப் பார்த்து
ஆடையைப் பார்த்து
ஒப்பனை பார்த்து...
பட்டம் பார்த்து
பதவி பார்த்து
வருமானம் பார்த்து...
ஜாதி, மதம் பார்த்து
வயது பார்த்து
வசதி பார்த்து...
உருவம் பார்த்து
அளவு பார்த்து
நிறம் பார்த்து...
சுற்றம் பார்த்து
சூழல் பார்த்து
பின்புலம் பார்த்து...
சுற்றிச் சுற்றி வந்து
அலையாய் அலைந்து
தவியாய்த் தவித்து...
தாடி வளர்ப்பதும்
மனம் வெறுப்பதும்
கற்பழிப்பதும்...
ஆசிட் ஊற்றுவதும்
கொலை செய்வதுமா
காதல்...
இல்லவே இல்லை...
இதயம் நிறைந்து
முழு மனதோடு
'எங்கிருந்தாலும் வாழ்க'வென
வாழ்த்தி அனுப்புவது தானே
உண்மைக் காதல்!
சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)