ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

Poochuddal



ன்ன்`````
 
                                         மாலினியின்  பூச்சூட்டல்/சீமந்தம் 

கடவுளுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

நிக்கிலின்  மனைவி  மாலினிக்கு இன்று   பூச்சூட்டல்!
நிக்கிலின்    அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
அமெரிக்காவில்  இனிதே நிகிலுடன்  வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, ரோஜா, என பல நறுமண மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனம் பூசி, பன்னீரும்  தெளித்து  வாழ்த்துவதே 
தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்வதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடையுதே
தானும் அணிந்து, பிறர்க்கும்  வெகுமதியாய் கொடுக்கப்படுகின்றதே  

வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவிப்போமே ,
அவ்வளையல் ஓசை அவள் குழந்தைக்கும்,கணவனுக்கும்  சொந்தமே  
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
மாலினியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (மாலினி) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள்,  மாலினியை வாழ்த்திடுவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

Nayagaarah Nathiye




                           நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !
             

        1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞனஇல்லை 
           நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பாரதில்லை 

       2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே 
           மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   

      3. மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே

          மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே

      4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ? 

          அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

      5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய்

        நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

     6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா
        எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
     
    7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய்         நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

    8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !

       நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !

   9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய

       நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய்

     நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி