செவ்வாய், 19 நவம்பர், 2024

Ninaikaa therintha Manam

 




                                       நினைக்கத்  தெரிந்த மனம்

             மனிதன் தேடும் மகிழ்ச்சி பேராசையில்  முடிகிறது 
          பேராசையால்  பேரின்பம் என்றும் தொடர்கிறது !

             கையளவு இதயம் வைத்தான், கடல் அளவு ஆசை 
                                                                                                  வைத்தான்.
             பேராசையால் மனிதன் முடிவினை தானே   
                                                                                 தேடிக்கொண்டான்

             போதும் என்கிற மனதில்தான் புன்னகை மலரும் 
             தட்டிப் பறிக்காமல், உதவிசெய்வதில் நிம்மதியிருக்கும் !

             நான் எனது என்ற சுயநலத்தை துறந்த  மனமே !
             மனித நேயத்துடன், விட்டுக்கொடுப்பதும் நலமே !

             மனிதா ! எங்கே  எதிலே  இருக்கிறது மகிழ்ச்சி  
             பணம், பட்டம், பதவி, இவற்றால் மகிழ்ச்சியா !

             மண்ணிலும், பொன்னிலும், பதவி,பட்டத்தில் இல்லை 
             மனிதனே, உன் மனதிலிருக்கிறது என அறியவில்லை !

             மகிழ்ச்சி கொண்டு நீ சுற்றத்தை வளைத்து விடு 
             மனித நேயம் கொண்டு நீ உதவிகள் செய்திடு !

              ரா.பார்த்தசாரதி  

திங்கள், 18 நவம்பர், 2024

 




                                                  குழந்தைகள் தினம் 

                       குழந்தைகள் நாட்டின் கண்கள் 
                       அன்பையும் பாசத்தையும்  அளித்திடும் 
                       புன்சிரிப்பு, மழலையும், மகிழ்ச்சி தந்திடும் 
                        கள்ளம் கபடுமில்லாமல் நம்மை தேடி வரும்.

                        ஊட்டச்சத்து குறைவின்றி குழந்தைகளை வளர்ப்போம் 
                        படிப்பிலும், விளையாட்டிலும் சிறப்புற செய்திடுவோம் 
                        ஆரோக்கியத்தை காத்து, நலமுற பாதுகாப்போம் 
                        உடலும், மனதும், செய்ம்மையுற பயிற்சி அளிப்போம் 

                        பாகுபாடின்றி கல்வி அளித்து ஏற்றமடைய செய்வோம் 
                        வேற்றுமையில், ஒற்றுமையை என்றும்  ஓங்கச்செய்வோம்
                        குழந்தையும்,  தெய்வமும்,  குணத்தால் ஒன்று, 
                        குற்றங்களை மறந்திடும்,  மனத்தால் ஒன்று !

                        குழந்தைகளிடத்தில் மிகவும் அன்பு கொண்டாரே  நேரு 
                        தன பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக அறிவித்தாரே 
                        பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கொண்டாட  செய்தாரே !
                        மக்கள் மனதிலும் நேரு இடம் பிடித்து  பெருமையடைந்தாரே !

                      ரா.பார்த்தசாரதி  = D 103