பெறுநர்: திருப்புகழ் அன்பர்கள் குழுமம் - Mrs. Uma Balaji
குருவே வழிகாட்டி, குருவேத்துணை
திருப்புகழைப் பாட . பாட வாய் மணக்கும், செந்தூர் முருகனால்
வாழ்க்கை என்றும் சிறக்கும் . திருபுகழனை வாரம்தோறும்
ஒவ்வொரு மேட்ரோசோன் இல்லங்களிலும் இனிதே நடைபெறுகிறது.
மனிதர்களில் மூன்று வகையுண்டு . முதல்வகை மனிதனாய் பிறந்து
தவறே செய்யாதவர். இரண்டாம் வகை தவறே செய்பவர். மூன்றாம்
வகை தவறு செய்துவிட்டு பின் திருந்தியவர்கள் .
மேற்கூறிய மூன்றாம் வகையை சேர்த்தவர்கள் வால்மீகியும்,
அருணகிரிநாதரும். இருவரும் இறைவன் அருளால் ஆட்படுத்தப்பட்டு
செயற்கரிய செயலை செய்தனர் . வால்மீகி, வால்மீகி ராமாயணமும்
அருணகிரி நாதர் முருகன் மீது பாடிய திருப்புகழ் எல்லோராலும்
பாடப்பெற்று எல்லோர் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றுள்ளது .\
சைவம், வைணவம் இரண்டிற்கும் பொது தன்மை உடையதாக
திருப்புகழ் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது
குருவே வழிகாட்டி, குருவேத்துணை, என்பதற்காகவே நம்மாழ்வார்க்கு
ஒரு மதுரகவி ஆழ்வார் சீடராய் இருந்து பக்தி பாடல்களையே
இயற்றினார். முருகன் அருளாலும், அவரையே வழிகாட்டியாக
கொண்டு அவர் அருளால் அருணகிரிநாதர் மூவாயிரம் பாடல்களுக்கு
மேல் பாடினார் . ஒரு சில பாடல்களே நமக்கு கிடைக்கப்பெற்றது .
திரு A.S, ராகவன் ( திருப்புகழ் குருஜீ ) திருப்புகழ் பாடல்களை செவ்வனே
சீரமைத்து உள்ளம் உருகும்படி பாடியும். மற்றவர்களுக்கு கற்பித்தும்
பல இடங்களில் திருப்புகழ் அன்பர்கள் குழு அமைத்து, பாராயணம்
செய்வதற்க்கு காரணமாய் இருந்தார் . வடக்கேயும், தெற்கேயும் மற்றும்
அயல் நாட்டிலும் திருப்புகழ் அன்பர்கள் பரவியுள்னனர் .சுருங்க கூறின்
திரு. ஏ' எஸ் . ராகவன் வாழ்நாள் முழுதும் திருப்புகழ் தூதுவராகவே
செயல்பட்டார் .
திருப்புகழ் அன்பர்கள் குழுமத்திற்கு உறுதுணையாக திருமதி சுதா
மற்றும் உமா பாலாஜியும் சென்னை மெட்ரோசோன் திருப்புகழ் அன்பர்கள் என்கிற குழுமத்தின் மூலம் செவ்வனே திருப்புகழ் வகுப்பு நடத்தப்படுகிறது .
குரு என்ற சொல்லே திருவின் அடையாளம் !
குருவின் துணையே வாழ்வின் சிறப்பாகும் !
குருவின் நல்லாசியே நமக்குத் துணையாகும் !
குருஜி ஏ .எஸ். ராகவன் திருப்புகழின் தூதுவராகும் !
இதனை எழுதி முடிக்கும் போது இரவு ஒன்பது மணி. எழுதி
முடித்ததும் நான் கேட்ட பாடல்,
மண்ணானாலும் திருச்செந்தூர் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையின் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையின் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன் !
-------------------------------------------------------------------------------------------------------------
தொகுத்தவர் : ரா. பார்த்தசாரதி