1. அலர்மேலுமங்கை சமேத, ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆசியுடன்
சதாபிஷேக விழா !
2. ஆண்டவன் ஆஸ்ரமத்தில் 01-01-2023 அன்று நடக்கும் விழா
திரு. ஸ்ரீ. ஸ்ரீதரனுக்கும் , திருமதி வசுமதிக்கும் சதாபிஷேக விழா !
3. அகவை அறுபதும், எண்பதும் என்றும் சிறப்புடையதன்றோ
மகள் ஸ்ரீமதியும், மகன் விஜய்யும், தலைமையேற்று நடத்துவதும்
பெருமைக்குரியதன்றோ !
4. ஆயிரம் நிலவை கண்ட இல்லறத் தம்பதிகளே
என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும் வையகத்திலே !
5. சதாபிஷேக விழா என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும்
அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையரின் ஆசியாகும் !
6. காலமும், காட்சிகளும் என்றும் உலகில் மாறும்
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
7. குடும்பம் ஒரு கதம்பம், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்
குடும்பத்தை ஆணிவேராய் தாங்குவதும் தலைவனாகும் !
8. வயதில் சிறியவர்கள் அவர்களிடம் ஆசிப்பெறட்டும்
வயதில் பெரியவர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கட்டும் !
9. நான்கு எழுத்திற்கு,நான்கும் தெரிந்தவர்கள் என்ற பெயருண்டு
ஸ்ரீதரன் , வசுமதி என்ற பெயருக்கும் நான்கு எழுத்துண்டு !
10. உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி விருந்து உண்ணட்டும்
ஆயிரம் பிறை கண்டவரை ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் !
11, அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது,
ரா.பார்த்தசாரதி - 8148111951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக