ஞாயிறு, 17 அக்டோபர், 2021

Nikitaa ayushhomam

 


                                                      

                       நீக்கிட்டாவிற்கு   ஆயூஷ்ஹோமம் 

                மங்கையராய்  பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும் 
                பெண்ணை  லக்ஷ்மிகடாக்ஷமாய் நினைத்திட வேண்டும் 
                குழந்தைகளின் உள்ளம் ,பளிங்கு போன்ற தூய  உள்ளம் 
                பாசமெனும் பூட்டைஅன்பபெனும் சாவியே திறக்கும் !

                 உடல் எனும் கூட்டிற்குள் இதயம் ஓர்  உயிரூ ,,
                 தொப்புள்கொடி உறவுக்குள் பாசம் ஓர் கயிறு 
                 குழந்தையின் முகத்திலும் , புன்சிரிப்பிலும் 
                  நம் கோடி  கஷ்டங்கள்   மறைந்தே  போகும் !          

                 ஒரு வயதில் காதுகுத்தி  ஆயுஷ் ஹோமம் நடைபெறுகின்றதே 
                 பாசத்திற்கும், நேசத்திற்கும்   என்றும் இடைவெளி இல்லை 
                 குழந்தையை  கட்டி  அணைப்பதில்தான் இன்பத்தின் எல்லை 
                 இதில் ஆண் என்ன,  பெண் என்ன, எல்லாம்  ஓரினம்தான் !
              
                 மந்திரங்கள் உபதேசித்து ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே 
                 பட்டாடை உடுத்தி  காது குத்தி , ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே 
                 நீக்கிட்டா  கடவுள் அருளால்  நீண்ட ஆயுள் பெற வாழ்த்துவோமே 
               
                நீகீட்ட  வந்து  அன்பு முத்தம் தா ( அப்பா,
        அம்மா,  தாதாக்கள்,பாட்டிகள்  
        மற்றும் மாமாவிற்கு .                           
        ரா.பார்த்தசாரதி (பெரிய தாத்தா )
                
                


சனி, 9 அக்டோபர், 2021






                                      நவராத்திரி  ஓர்  சுபராத்திரி 

                       நவ  நாயககிகளுக்கு   ஓர்  ராத்திரி 
                       நவ  சக்திகளை கொண்டாடும்  ராத்திரி 
                       பெண்களை  சக்தியாய்  போற்றும் ராத்திரி 
                      பொம்மைகளை வைத்து போற்றும்  நவராத்திரி  

                       மூப் ப்பெரும்தேவியர்கள்  பங்களிக்கும் ராத்திரி 
                       வல்லமை  தந்திடும்   மலைமகளை போற்றுவோம் 
                       நற்பொருள் தந்திடும் அலைமகளை  போற்றுவோம் 
                       கல்வி தந்திடும்  கலை மகளை  போற்றுவோம்!
                        
                       சர்வம்   சக்தி  மயம் எனப் போற்றும்  ராத்திரி
                       ஆண்களுக்கு   என்றும் ஓர்  சிவராத்திரி 
                       பெண்களுக்கு என்று கொண்டாடும் நவராத்திரி 
                       விஜயதசமியில் எண்ணங்கள் நிறைவேறும் ராத்திரி !

                       ரா.பார்த்தசாரதி 
                           
                               
                                 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

 



காதல் எழுத்து

அழகான அவளை பார்த்தேன்

ஆசையை அவளிடம் சொன்னேன்

இதயத்தில் அவளை வைத்தேன்

ஈமை போல் உன்னை காப்பேன்

உனகாகவே நான் வாழ்கிறேன்

ஊர் எல்லாம் உன்னையே தேடி

பார்த்தேன்

என்றும் உன்னையே காதலிப்பேன்

ஏழு ஜென்மம் உன்னோடு சேர்ந்து

வாழ துடிக்கிறேன்

ஐ.லவ்.யூ என்ற வார்த்தையை

ஒரு முறை சொல்ல கேட்கிறேன்

ஃக்கனமும் உன்னையே

நேசிக்கிறேன்

எழுதியவர் : தா

புதன், 6 அக்டோபர், 2021


இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள்

Parthasarathy Ra

 

வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் எழுத்தாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள். வல்லமை வாசகர்களுக்கு இவர் தனது கவிதைகள் பலவற்றையும், சிறுகதைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக சென்ற வாரம் “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக “காதல் என்றால். . . ?!”  என்ற கவிதை என இரு கவிதைகளை வழங்கியுள்ளார். அத்துடன் “மாறிய ஜென்மங்கள்”  என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின்  யதார்த்த வாழ்க்கையையும், பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார்.

தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூகள்”  என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும் அவரது இரு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எண்ணமும், சிந்தனையும்!
______________________________________

எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!

மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!

நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !
***

மனிதனே சற்றே நினைத்துப்பார்
______________________________________

எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !

பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !

மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !

பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !

மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!

கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!

எண்ணுபவர் – விழிப்பர்
விழிப்பவர் – உழைப்பர்
உழைப்பவர் – உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!

இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?

 

வல்லமையாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்களைப் பாராட்டி அவர் தனது இலகியப் பயணத்தில் வெற்றிகள் பல பெற வல்லமை நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

 









வெள்ளி, 1 அக்டோபர், 2021

    

                                      காந்தி   கல்லாகி விட்டார்

உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன் 
நேர்மை எங்கே என்று எல்லோரிடந்திலும் கேட்பேன் 
எளிமை எங்கே என தேடி அலைந்து கொண்டிருப்பேன் 
தூய்மை  எங்கே என மனம் குமுறி துடித்துபோவேன் !
சத்யதிற்கே ஒரு சத்யசோதனையா என எண்ணிடுவேன் 
அகிம்சை  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன் 
மனித நேயத்தை இந்ந்நாட்டில் எங்கே என்று கேட்பேன் 
நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன் !

அன்று வெள்ளையரை வெளியேற அமைதி போரை துவக்கினேன் 
இன்று மக்கள் தண்ணீருக்காக போராட்டத்தை நடத்துகிறார்களே 
எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே 
நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே !
நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின்விடுதலைக்காகவே 
இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே 
என்னை தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே 
என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே!

என் மதிப்பு, என் தலை, ரூபாய் நோட்டின் முகப்பிலே ,
என் கொள்கைகள் எல்லாம் வீசபடுகின்றதே தெருவிலே,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றேனே 
இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே !

ரா. பார்த்தசாரதி
 

 



                                       

                                   
                                 முதுமை 

முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும்  கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !

அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு  இல்லை
பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இக்காலத்திலே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எக்காலத்திலே ?

அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும்  இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால்  காமம் இங்கில்லை  !

முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின்  நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று  முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை  மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள் !

தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுஉடைமை !

முதுமையை இளமையாக்கி நெஞ்சுரத்துடன் நடைபோடுங்கள்
நட்பையும், உறவையும் என்றும் தவிர்த்து விடாதீர்கள்
நடைப்பயிற்சியும், யோகாவும் செய்து  உடலை பேணுங்கள்
எங்கே சென்றிடும் காலம் நம்மை, வாழ்விக்கும் என எண்ணுங்கள் !



ரா.பார்த்தசாரதி


.