திங்கள், 27 செப்டம்பர், 2021

 



              திரு. வ.எஸ். ராகவனுக்கு  வாழ்த்துமடல்  
            

            செய்யும்  தொழிலே  தெய்வம் 
           காணும் திறமைதான் நமது செல்வம்,
           கையும், காலும்  நமக்கு உதவி,
           அதுவே  அளிப்பதோ, புகழ் எனும், பதவி !

            திரு வி.எஸ். ராகவன் (சத்யா) மிருதங்க  கைவண்ணம் 
            பல  ரசிகர்களுக்கு  அமைவதோ  பாராட்டும் வண்ணம் 
            புகழ் பெற்றவர்களுக்கு மிருதங்கம்  வாசிப்பது  உன் திறமையே     
           எல்லோராலும்  பாராட்டுவதும்  என்றும்  அருமையே !

           வி .எஸ்  ராகவன் (சத்யா) மிருதங்க வாசிப்பில் திறமை காட்டிடுவாய் 
            நாட்டிலும், அயலூரிலும்  என்றும் வெற்றிக்கொடி  நாட்டிடுவாய்  
           அரங்கேற்றம்  இல்லாமல்  புகழ்  எனும்   ஏணியைபி  பற்றினாய் 
            இவையெல்லாம்  ஆண்டவன் அருளே என  நினைத்திடுவாய் !

           நந்திஸ்வரர்  அருளே  என்றும்   உனககு   துணை 
            என்றும்   குரு. கடவுளின்  அருளே  என நினை 
            பதவி,  புகழ்  வரும்போது  பணிவு வேண்டும்
            பின்னாளில்  மிருதங்க  சக்கரவர்த்தி  என பெயர்  பெற்றிடுவாய் !



          ரா.பார்த்தசாரதி 





            
          
                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக