ஞாயிறு, 15 டிசம்பர், 2019
திங்கள், 2 டிசம்பர், 2019
செவ்வாய், 29 அக்டோபர், 2019
வெள்ளி, 25 அக்டோபர், 2019
Piranthanaal
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ நீடு வாழ வேண்டும்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும
நீ நீடு வாழ வேண்டும
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும் கைக்கொள்ளவேண்டும்
நன்மை செய்து புண்ணியத்தை என்றும் சேர்க்கவேண்டும்
எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழுத வேண்டும
நிலவுத் தாளில் எழுத வேண்டும
உறவையும், நட்பையும் பேண வேண்டும
பாசமும், நேசமும் வளர்த்திடவேண்டும்
எனது அன்பும் ஆசியும் என்றும் பெறவேண்டும்
பல்லாண்டு வாழ என ஆசீர்வாதத்தை அளிப்பேன்
பிறந்த நாள் வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ரா.பார்த்தசாரதி
புதன், 2 அக்டோபர், 2019
சனி, 21 செப்டம்பர், 2019
Thirumalai Deivam
திருமலை தெய்வம்
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் !
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் !
வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !
தாயாரை தரிசித்து வேங்கடவனை தரிசிப்போம் !
தரணியில் யாவரும் நலம்பெற யாசிப்போம் !
மனிதனை புனிதம் ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில் சலனம் போக்குவது தெய்வ தரிசினம் !
திருமலைவாசா என்று அழைத்தாலே குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும் நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !
திருமலை வாசனின் பாத கமலினை போற்றிடும் வேளை
சுப்ரபாதம் எனும் சேவையுடன் விழித்தெழுகின்ற காலை
புனித புஷ்காரணியில் காட்சி தரும் தோற்றம்
சங்கு, சக்ரம் ஏந்தி காட்சி தருவதே நமக்கு ஏற்றம் !
கோவிந்தா, கோவிந்தா, என்றாலே பரவசம் !
கோவிந்தன் அருளும் கிடைத்திடுமே நம்வசம் !
என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம், திருமலை தெய்வம் !
ரா.பார்த்தசாரதி
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019
திங்கள், 11 மார்ச், 2019
Priyanka vazthu madal
திருமண வாழ்த்துமடல்
மணமகன்: ஆர். குமரன் இடம்: ஹோட்டல் சிங்கப்பூர் மஹால்
மணமகள்: டீ . பிரியங்கா தேதி : 13 / 03/ 2019
1. இன்று எழும்பூரிலுள்ள ஹோட்டல் சிங்கப்பூர் மஹாலில் ஓர் கல்யாணமேடை ,
வெங்கடாசலபதீயின் அருளால் நடந்திடும் கல்யாண மேடை
2. இருவீட்டாரும் இணைந்தே நடத்திடும் விழா
உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும் விழா !
3. திரு.தமிழ்ச்செல்வன் ,திருமதி பவானி தம்பதியரின் மூத்த மகளே !
என்றும் சென்னையில் பணிபுரிந்திடுவாய் சிறப்புடனே
திருமணம் என்பது இருமனம் அல்ல .
அதுவே இருமனம் கொண்ட ஒரு மனமாகும் !
திருமணம் என்பது இருமனம் அல்ல .
அதுவே இருமனம் கொண்ட ஒரு மனமாகும் !
4. கல்யாணம் என்றாலே, என்றும் வைபோகமே
வாரணமாயிரம் பாடி வாழ்த்துவோமே !
5. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
அகிலத்தில் சிறந்தது தாய், தந்தையின் வாழ்த்துக்களே !
6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
7. பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !
10.திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம்
திருமதியின் பெயரை ப்ரியங்கா என்று அழைப்பது பழக்கம்!
11.கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவளே மனைவியாகும் !
12. காலங்கள், கோலங்கள் என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!
14. உற்றாரும், உறவினரும் ஒன்று கூடி விருந்துண்போம்
மணமக்களை வாழ்வில் வளம்பெற வாழ்த்துவோம்!
15 மத்தளம் கொட்ட , மணமகன் தாலியினை கட்ட,
உடன் பிறந்தவள் சேர்ந்தே முடிச்சு போட ,
உற்றார் , உறவினர்கள் சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட
இனிதே நடந்ததே ஆர். குமரன், டீ. ப்ரியங்கா திருமணம் ! !
16.அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும், பயனும் அது. - (வள்ளுவன் வாக்கு)
ரா.பார்த்தசாரதி .
Metrozone D Block 103
ReplyForward
|
P.Sreekumar Vazthumadal
திருமண வாழ்த்து மடல்
மணமகன்: P. ஸ்ரீகுமார் இடம்: ஸ்.வி. மஹால்,
மணமகள்: M. நிஷா தேதி : 10 / 03/ 2019
1. இன்று திருமுல்லைவாயலில் உள்ள S.V. மஹாலில் ஓர் கல்யாணமேடை ,
வெங்கடாசலபதியால் இன்னாருக்கு இன்னார், என்று எழுதிவைத்த மேடை
2. இருவீட்டாரும் இணைந்தே நடத்திடும் விழா
உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும் விழா !
3. திரு.பிரபாகரன்,திருமதி புவனேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனே !
என்றும் சென்னையில்லுள்ள TCS இல் பணிபுரிந்திடுவாய் சிறப்புடனே
4. கல்யாணம் என்றாலே, என்றும் வைபோகமே
வாரணமாயிரம் பாடி வாழ்த்துவோமே !
5. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
அகிலத்தில் சிறந்தது தாய், தந்தையின் வாழ்த்துக்களே !
6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
7. பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !
10.திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம்
திருமதியின் பெயரை நிஷா என்று அழைப்பது பழக்கம்!
11.கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவளே மனைவியாகும் !
12. காலங்கள், கோலங்கள் என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!
14. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, விருந்துண்டோம்,
மணமக்களை வாழ்வில் வளம்பெற வாழ்த்துவோம்!
15 மத்தளம் கொட்ட , மணமகன் தாலியினை கட்ட,
உடன் பிறந்தவள் சேர்ந்தே முடிச்சு போட ,
உற்றார் , உறவினர்கள் சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட
இனிதே நடந்ததே ஸ்ரீகுமார், நிஷாவின் திருமணம்.
16.அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும், பயனும் அது. - (வள்ளுவன் வாக்கு)
ரா.பார்த்தசாரதி .
thirunagar park friend
ReplyForward
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)