வெள்ளி, 5 ஜனவரி, 2018

Thirumanam




                                                                திருமணம்

 வாழ்க்கை துணை நலம் நாடி, திருமண கோலத்துடன் காட்சியளிக்கின்றாய்
திருமணம் என்பது, இருமனங்கள்  கொண்ட ஒருமனம்  என உணர்வாய்
திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி,  இல்லறத்தில் இன்பமுடன் ஈடுபடுவாய்
இனி எச்செயலையும்  இருவரின் தீர்மானத்தில்   நடத்திக்  காட்டிடுவாய் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்திடும் வரமே
நீ மாண்புறுவதும், பெருமையடைவதும் அவள் வந்த நேரமே
திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது  வழக்கம்
அவள் பெயரை செல்லமாக  அழைப்பதே  பழக்கம் !

 புகைப்படத்திற்காக  இன்முகம் காட்டி  சிரிக்கின்றிர்கள்
 இல்லற வாழ்க்கையில்  சிரிப்பு என்பது சில காலமே என உணருங்கள்
 ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததாகும்
 இருப்பதை கொண்டு மனநிறைவுடன் வாழ்வதே மிக நன்மையாகும்.

 காலங்களும், கோலங்களும்,  உலகில் என்றும்  மாறும் 
 
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்!!

.மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
 மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!


  பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
  புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் 
        

  கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
  அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !

  

  அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
  பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 


  ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக