செவ்வாய், 2 ஜனவரி, 2018







                                                மாலினியின்  பூச்சூட்டல்/சீமந்தம்

கடவுளுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

நிக்கிலின்  மனைவி  மாலினிக்கு இன்று   பூச்சூட்டல்!
நிக்கிலின்    அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
அமெரிக்காவில்  இனிதே நிகிலுடன்  வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, ரோஜா, என பல நறுமண மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனம் பூசி, பன்னீரும்  தெளித்து  வாழ்த்துவதே
தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்வதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடைந்ததே
தானும் அணிந்து, பிறர்க்கும்  வெகுமதியாய் கொடுக்கப்படுகின்றதே 

வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவிப்போமே ,
அவ்வளையல் ஓசை அவள் குழந்தைக்கும்,கணவனுக்கும்  சொந்தமே 
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
மாலினியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (மாலினி) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள்,  மாலினியை வாழ்த்திடுவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக