ராகுல் திருமண வாழ்த்து மடல்
மணமகன் : கே. ராகுல் இடம்:பிரேமாவதி ஹால்
மணமகன்: எஸ். வைஷ்ணவி கோவிலம்பாக்கம்
சென்னை - 600 117
தேதி : 07-12--2017
1. கோவிலம்பாக்கத்திலுள்ள பிரேமாவதி ஹாலில் திருமண மேடை
இன்னாருக்கு இன்னாரென்று இறைவன் எழுதிவைத்த திருமண மேடை,
2. இருவீட்டாரும் இணைந்தே நடத்திடும் விழா ,
உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும் விழா !
3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர் ஆசியே
அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர் ஆசியே !
4. திருமணத்தை எதிர்நோக்கும் ராகுல் எனும் ஆடவனே என்றும் சென்னையில் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே
5. திருமணம் என்பது இருமனங்கள் அல்ல !
அதுவே இருமனங்கள் ஒரு மனமாகும் !
6. திருமதி என்பது ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம்
திருமதியின் பெயரோ வைஷ்ணவி என்று சொல்வது பழக்கம் !
7. காலங்களும், கோலங்களும், என்றும் மாறும்
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!!
8. மலர்போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
9. பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !
10. கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!
12. மகள் இல்லாத வீட்டில் மருமகளே மகள் ஆவாள்
குடும்பத்தை நிலைநிறுத்தும் குலவிளக்கு ஆவாள் !
13. அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும், பயனும் அது. என்பது வள்ளுவர் வாக்கு.
ரா.பார்த்தசாரதி / கமலா பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக