பெண்ணிற்கு வளையல்
நன்மனத்துடன் வளையல்களை அணிவிக்க கையை நீட்டச்சொன்னார்
கைகளின் அளவிற்குக்கேற்ப வளையலை பெண்ணிற்கு அணிவித்தார்
என்றுமே வண்ண கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு
இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!
வண்ண வளையல்களை கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு
அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு
அந்த வலையோசையுடன் பிறர்க்கு காண்பிப்பதில் பெருமையுண்டு
வலையோசையும், மெட்டிஒசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!
ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம் மகிழ்விக்கும்
வலையோசையும், மெட்டி ஓசையுமே, ஈர்க்கும் தன்மை அதிகம்
பெண் வளையல்களை அணிவதன் காரணம் ஏனோ ?
கணவன் தன்னை வளைய,வளைய வருவதற்குத்தானோ ?
தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற தாயும் மகிழிச்சி அடைந்ததே
தானும் அணிந்து, பிறர்க்கும் அதனை வெகுமதியாய் கொடுக்கப்படுதே
வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே !
ரா.பார்த்தசாரதி