தீபாவளி
மக்களுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த பண்டிகை,
எல்லோரும், ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!
விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே புத்தாடை உடுத்தி, இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும் ஒன்றாய் கலந்து கொண்டாடும் தீபாவளி!
நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி
வடக்கே விளக்கு,பூஜா லட்சுமிபூஜா எனக் கொண்டாடும் தீபாவளி,
இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,
புன்சிரிப்புடன், மன நிறைவாய் , வாழ்த்து பெரும் தீபாவளி !
வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே
வெடியின் சப்தமும், சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பினை காண்போமே,
மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே,
சங்கு சக்கரம், புஸ்வாணப் பூக்களின் சிதறலை கண்டு களிப்போமே !
அசுரன் நினைவாக நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றோம்
மனித உருவில் உள்ள அசுரர்களை அழிக்க நாம் திட்டமிடுவோம்,
பார்வையற்றவர்கள் விடுதிக்கும், முதியோர் இல்லத்திற்கும் செல்வோமே
அவர்களுடன் இனிப்பினை பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!
நரகன் மரணித்த நன்னாளில் தீபாவளி
ஒன்று கூடி வெடிகள் வெடித்திடவே
மன மகிழ்ச்சி கொண்டு பூச்சரங்களை ரசித்து
இன்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு
இதமான மொழிப்பேசி இணக்கமோடு வாழ்வோம்
அக்கம் பக்கம் வீட்டில் உள்ளோர் நல்லுறவை பேண
பண்டிகைகள் நல்லதொரு வாய்ப்பென கொள்வோம்
தொண்டுள்ளம் கொண்டு,நலிவடைந்தோர்க்கு உதவிடுவோம் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக