கல்யாணம்
கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல காளை வந்தான்
கழுத்தில் தாலி ஏறும் வேளை வந்தது
மாப்பிள்ளை காசு கேட்டதால் கல்யாணம் நின்றது
கல்யாண சந்தையில் மாப்பிள்ளை ஒரு வியாபார பொருள்
பிள்ளையை விற்கும் பெற்றோரை பாருங்கள்
தன்மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்
பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப்பொருள் ஆனதே
கரும்பு தின்ன கூலி கேட்கும் அவலம் ஆனதே!
வரதட்சிணை உங்களை பூம்,பூம் மாடக்கியதே
வருங்காலத்தில் வரதட்சிணை மறைமுகமாக வசூலாகிறதே
வரதட்சிணைக்கு தடை விதியுங்கள்
பெண்ணின் இதயத்தை தட்சணையாக கேட்டுடுங்கள்!
உங்கள் அன்பை பெண்ணுக்கு கைமாறாய் கொடுத்திடுங்கள்
மகள் இல்லா வீட்டில் , மருமகளை மகளாக நினைத்திடுங்கள்
மகன் இல்லா வீட்டில் மருமகனை மகனாய் நினைத்திடுங்கள்
மாப்பிளைகளே வரும் காலத்தில், பூம்,பூம் மாடாய் இருக்காதீர்கள் !
வரதட்சிணை இல்லா வாழ்க்கைத் துணையை நாடுங்கள்
பணத்தை குறிக்கோளாய் என்றும் நினைத்திடாதே
படிப்பிற்கும், அறிவுக்கும், மதிப்பு அளித்து விடு
விட்டுக்கொடுத்து வாழ்வதே நன்மை என நினைத்திடு !
ரா.பார்த்தசாரதி
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக