சனி, 29 ஜூலை, 2017

எதிர்பாராthathu







                        



               எதிர்பாராததது   


மனித வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்,
ஏனென்று  தெரியாத வருத்தம்
மனதில் சட்டென்று மாறும் யோசனைகள் 
உள்ளத்தினில் சத்தம் போடாத ஆசைகள்
.
எதற்குமே வெட்கப்படாத ஏக்கம்
நெஞ்சினில் வேதனை கலந்த துக்கம்
படபடப்பில் ஏற்படும் காரணமில்லாத கோபம்
இழந்ததை கண்டு, கண்ணீர் சிந்தும் தோல்வி!

வாழ்வில் மறக்க விடாத நினைவுகள்
மனதினில் மறைக்க முடியாத உறவுகள்
மனதிலே அலைபாயும் காதல்
மனிதன் அலைந்து தேடும் வேலை!

என்றும் விட முடியாத தொடர்புகள்
விட்டொழியாத தொல்லைகள்
கலங்க வைக்கும் அவமானங்கள்
கலைய மறுக்கும் கனவுகள்!

இத்தனையும் மொத்தமாகி நிற்க
இவ்வளவு தான் வாழ்க்கை என
எதையும் தொலைத்து விட வேண்டாம்!

கிடைத்த வாழ்க்கையை
குறைகள் சொல்லி உடைத்து விடாமல்
இருப்பதை  கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தாலே!
மகிழ்ச்சி  என்றும் நம்பக்கம் !

ரா.பார்த்தசாரதி

புதன், 26 ஜூலை, 2017

கல்யாணம்



                                                 

                                                   கல்யாணம் 

           கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல காளை வந்தான்
           கழுத்தில் தாலி ஏறும் வேளை  வந்தது
           மாப்பிள்ளை  காசு கேட்டதால் கல்யாணம் நின்றது
           கல்யாண சந்தையில் மாப்பிள்ளை  ஒரு வியாபார பொருள்

           பிள்ளையை விற்கும் பெற்றோரை  பாருங்கள்
           தன்மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்
           பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப்பொருள்  ஆனதே
           கரும்பு தின்ன கூலி கேட்கும் அவலம்  ஆனதே!

          வரதட்சிணை உங்களை பூம்,பூம் மாடக்கியதே
           வருங்காலத்தில் வரதட்சிணை மறைமுகமாக வசூலாகிறதே
           வரதட்சிணைக்கு  தடை விதியுங்கள்
           பெண்ணின் இதயத்தை தட்சணையாக கேட்டுடுங்கள்!

           உங்கள் அன்பை பெண்ணுக்கு கைமாறாய் கொடுத்திடுங்கள்
          மகள் இல்லா வீட்டில் , மருமகளை மகளாக நினைத்திடுங்கள்
          மகன் இல்லா வீட்டில்  மருமகனை மகனாய் நினைத்திடுங்கள்
          மாப்பிளைகளே வரும் காலத்தில், பூம்,பூம் மாடாய் இருக்காதீர்கள் ! 
        

          வரதட்சிணை  இல்லா வாழ்க்கைத்  துணையை நாடுங்கள்
          பணத்தை குறிக்கோளாய் என்றும் நினைத்திடாதே
          படிப்பிற்கும், அறிவுக்கும், மதிப்பு அளித்து விடு
          விட்டுக்கொடுத்து  வாழ்வதே நன்மை என நினைத்திடு  !
           
          ரா.பார்த்தசாரதி  
    
           

          

 



.

சனி, 1 ஜூலை, 2017

திருமண நாள்




     
                                      திருமண நாள்


உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ
இலத்தரசனும், அரசியுமாக
மங்கலநாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள்

திருமணம் என்பது இரு மனம் அல்ல 
அதுவே இரு மனம் கொண்ட ஒரு மனம்.
இருமனமும் புரிதலோடு வாழும்வாழ்க்கை 
வருடா வருடம், நினைத்து பெருமிதம் கொள்ளும் திருமணநாள் .

வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலப் பயிராக
கிளை பரப்பி செழித்து நிற்க
அஸ்திவார நாளே திருமண நாள்


கண்ட கனவுகள் நனவுகளாக
மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க
சமூகத்தில் புது அந்தஸ்து
பெறும் நாளே திருமண நாள்

சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான
எதிர்காலம் சமைத்திட
அடிகோலும் பெருநாளே
திருமணநாள்

ரா.பார்த்தசாரதி / கமலா பார்த்தசாரதி