வியாழன், 5 மே, 2016

சதாபிஷேக வாழ்த்து மடல்








                         சதாபிஷேக வாழ்த்து மடல் 
 
இடம்: பாலக்காடு                              தேதி : 16-05-2016

இன்று  திரு.லக்ஷ்மிநாராயணன், அவர்களின்   சதாபிஷேக விழா !
திருமதி ராஜேஸ்வரியும்,    திரு. லக்ஷ்மிநாராயணனும் ஆயிரம் பௌர்ணமி  கண்ட  தம்பதிகள்!

சதாபிஷேகம்  என்பது தம்பதியர் வாழ்க்கையில் சிறப்புடையதன்றோ,
இதனை தலைமையேற்று நடத்தும்  மகனும்,மகள்களும் பெருமைக் குரியவர்களன்றோ!

 சதாபிஷேகம் என்றாலே, மூத்தவர்களிடம் ஆசி பெறுவதே   !
மகன்களும்,மகள்களும், பேரன்,கொள்ளு பேரன்களுக்கும் ஆசீர்வாதம் 
அளிப்பதே !  உற்றார் உறவினர் வாழ்த்தும், ஆசியும் நிறைந்ததாகும்!
அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  ஆசியே சிறந்ததாகும் !

காலமும், கோலங்களும்,  என்றும்  மாறும் 
கணவன், மனைவி  உறவே என்றும் நிலைத்து வாழும்  !

ஆயிரம் கைகள் கொண்டு ஆதவனை மறைக்க முடியுமா 
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி கணவனை மறக்கமுடியுமா !

கணவன் என்றாலே  (கண் + அவன்)  என்பதாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

கண்ணின் அருகே இமை இருந்தாலும், கண்ணைவிட்டு பிரிவதில்லை !
மனைவி, கண்ணின் இமையென, கணவனை விட்டு பிரிவதில்லை!

திருமதி ஒரு வெகுமதி, என்று   அழைப்பது  பழக்கம் 
திருமதியின்  பெயரோ ராஜேஸ்வரி என்றழைப்பது வழக்கம் !

இறைவருளுடன்   தம்பதியர்கள் வளம் பெற்று, குலம் 
தழைத்தோங்கட்டும்!
பெரியவர்கள் ஆசி அளித்தும், சிறியவர்கள் ஆசியும் பெற்று  மகிழட்டும் !

அன்பும், அறனும்  உடைத்தாயின்  இல்வாழ்க்கை 
பண்பும், பயனும்  அது.   என்பது வள்ளுவன் வாக்கு !

உற்றார் , உறவினரும்,  இனிதே விருந்துண்டு  மகிழ்ந்தனரே
நன்மனம் கொண்டு வாழ்த்தி,தாம்பூலத்துடன் விடைபெற்றனரே !

ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.

 ===============================================

இப்படிக்கு
 பிரேமா கண்ணன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக