வியாழன், 28 ஏப்ரல், 2016

தொழிலாளர் தினம்

                                       தொழிலாளர்  தினம்

தொழில்கள் சிறக்க  தொழிலாளர்கள் தேவை
பொருட்கள் செய்யவும்  தொழிலாளர்கள் தேவை
எந்திரங்கள் செய்தாலும் தொழிலாளி  தேவை
அதனை இயக்கவும்  ஒரு தொழிலாளி தேவை !

தொழில்  வளர்ச்சிக்கு தொழிலாளி முக்கியம்
அவர்கள் இல்லை எனில் தொழில்கள் நலிவடையும்
அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள்
அவர்கள் நலனில் அக்கறைக் காட்டுங்கள் !

தொழிலாளியும்   ஒரு மனிதன்தான்
அவனுக்கும்   வீடு  வாசல், சொந்த கருத்து சொல்ல உரிமை உண்டு
தன் குறையினை  எடுத்துரைக்க உரிமையுண்டு
தொழிலாளியின் மேன்மை,நலம் பற்றி நினைப்பதுண்டு

தொழிலாளர் தினம் வருடாவருடம் வருவதுண்டு
ஒவ்வொரு  நாடும்  தொழிலார் தினத்தை  கொண்டாடுவதுண்டு
தொழிலாளி மெச்சிய  முதலாளி உலகில் இல்லை
முதலாளி மெச்சிய தொழிலாளி உலகில் இல்லை

தொழிலாளியும் ஒருநாள் முதலாளியாவதுண்டு
முதலாளியும் ஏழையாகி நடுத்தெருவில் நிற்பதுண்டு
இவை எல்லாம் காலத்தின் கோலம் என்று சொல்வதுண்டு
தொழிலாளியின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என சொல்வதுண்டு!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக