வியாழன், 28 ஏப்ரல், 2016

தொழிலாளர் தினம்

                                       தொழிலாளர்  தினம்

தொழில்கள் சிறக்க  தொழிலாளர்கள் தேவை
பொருட்கள் செய்யவும்  தொழிலாளர்கள் தேவை
எந்திரங்கள் செய்தாலும் தொழிலாளி  தேவை
அதனை இயக்கவும்  ஒரு தொழிலாளி தேவை !

தொழில்  வளர்ச்சிக்கு தொழிலாளி முக்கியம்
அவர்கள் இல்லை எனில் தொழில்கள் நலிவடையும்
அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள்
அவர்கள் நலனில் அக்கறைக் காட்டுங்கள் !

தொழிலாளியும்   ஒரு மனிதன்தான்
அவனுக்கும்   வீடு  வாசல், சொந்த கருத்து சொல்ல உரிமை உண்டு
தன் குறையினை  எடுத்துரைக்க உரிமையுண்டு
தொழிலாளியின் மேன்மை,நலம் பற்றி நினைப்பதுண்டு

தொழிலாளர் தினம் வருடாவருடம் வருவதுண்டு
ஒவ்வொரு  நாடும்  தொழிலார் தினத்தை  கொண்டாடுவதுண்டு
தொழிலாளி மெச்சிய  முதலாளி உலகில் இல்லை
முதலாளி மெச்சிய தொழிலாளி உலகில் இல்லை

தொழிலாளியும் ஒருநாள் முதலாளியாவதுண்டு
முதலாளியும் ஏழையாகி நடுத்தெருவில் நிற்பதுண்டு
இவை எல்லாம் காலத்தின் கோலம் என்று சொல்வதுண்டு
தொழிலாளியின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என சொல்வதுண்டு!



ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வாக்களர்களே சற்றே நினையுங்கள்



                         வாக்களர்களே  சற்றே நினையுங்கள்


தேர்தல் என்பது ஒரு மகாபாரதம்
சூழ்ச்சிகளில் சிறந்த வேட்பாளர் உண்டு
மக்களிடையே பல வாக்குறிதிகள் /கொடுபத்துண்டு
தேர்தல் என்பதே ஒரு நாடக மேடை என சொல்வதுண்டு !

கட்சிக்கு செய்ததை விட  தொகுதிக்கு என்ன செய்வாய்
மாதம் ஒரு முறை மக்களை நேரில் சந்திப்பாயா
மக்கள் குறைக்   கேட்டு  தீர்ப்பாயா
இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவாயா !

மக்களே வாக்கினை அட்சய பாத்திரமாக    நினையுங்கள்
அதை பிச்சை இட்டு பிட்சைக்காரனாக நிற்க்காதிர்கள் 
பணம் கொடுபவர்களுக்கு   வாக்கு அளிக்காதிர்கள்
படித்த நற்பண்போடு உள்ளவர்களுக்கே வாக்களியுங்கள் !

அரசியல் ஆதாயம்  தேடுபவர்களை புறக்கணியுங்கள்
மக்களை பலிகடா ஆக்கும் வேட்பாளரை எதிர்த்திடுங்கள்
வாக்கினை பொன்னாக  கருதி  வாக்கு  அளித்திடுங்கள்
நல்ல தலைவனை நியமித்து நாட்டிற்கு நலம் சேர்த்திடுங்கள் ! 


ரா.பார்த்தசாரதி