செவ்வாய், 14 அக்டோபர், 2014

உணவே மருந்து, மருந்தே உணவு


                                              உணவே மருந்து, மருந்தே உணவு

        அரிதரிது  மானிடராய்  பிறத்தல் அரிது,
        நல்ல உணவினை உட்கொள்வதும் அரிது 
        பழமை மறந்து, மேலைநாட்டு புதுமை பழக்கம் 
        நாகரிக முன்னேற்றத்தால்   ஏற்பட்ட மயக்கம்  !

        மேலை நாட்டு துரித உணவு பழக்கம் வளர்ந்ததே 
        நமது  உடல்நலம் கெடுவது இன்று தெரிந்ததே 
        கீரை, களி, கூழ்  இவை எல்லாம் மறந்து போச்சே 
        பிட்சா, பர்கர்  என்பதே   இன்றைய உணவாச்சே!

        உணவை  அளிக்கும் உழவனை என்றும் மறவாதே
        உணவே மருந்தாய், அளவாய் கடைபிடித்தல் நல்லதே 
        உடல் ஏற்றமுற   நாம் கைகொள்வோமே  இயற்கை உணவு
       இதுவே  நமது உடல்  ஏற்றம் பெற  சிறந்த உணவு  !

        அன்று வீட்டு வேலைகள், வயலில் நடவு செய்தும் உழைத்தார்கள் 
        அன்று பசித்து புசித்தார்கள்,  இன்று, பசிக்காக  ஏதோ புசிக்கிறார்கள்
       உடற்பயிற்சிகள்  குறைந்ததால்  உடலில் சதைகள் வளர்ந்ததே,
       இதனை குறைக்க  உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று அதிகமானதே  !

        இன்று நோய்க்கு  காரணம்  பாதுகாப்பற்ற  உணவு பழக்கமே
       என்றும் இதனை கட்டுபடுத்த முயல்வது  நமது திண்ணமே
        உண்டி சிறுத்தல்  என்றும்  உடலுக்கு  அழகு 
       கலப்புணவு, கீரைகள்,  பழங்கள்  உண்ணப் பழகு !

       மனிதனே, பாரம்பரிய உணவினை மேற்கொள் 
      தினமும் உடற்பயிற்சி  செய்ய கற்றுக்கொள்
      சரிவிகித  உணவினை தினமும் எடுத்துக்கொள் 
     உணவே மருந்து,  மருந்தே உணவு  எனப் புரிந்துகொள் !

      ரா.பார்த்தசாரதி

வந்தாள் மகாலக்ஷ்மியே




                                               வந்தாள் மகாலக்ஷ்மியே

வந்தாள்  மகாலக்ஷ்மியே , என்றும் அவள் ஆட்சியே,
பெண்ணின் பெருமை அறிந்திட வேண்டும் அவனியிலே 
மாதராய் பிறப்பதற்கு  மாதவம் செய்திட வேண்டுமே 
பெண்ணை  குடும்பத்தின் சக்தியாய் கருத வேண்டுமே!

நவராத்திரி விழா நாம் கொண்டாடுவதே பெண்ணிற்கே
பெண்  குழந்தைகளை தெய்வமாய் கருதிடும் நவராத்திரி 
பெண் பிறந்தாலே,  பெருமை  என  மனதில் எண்ணிடுங்கள்
பெண்  குழந்தைகளை பாரபட்சம்மின்றி  வளர்த்திடுங்கள்!

பெண் குழந்தைகளை அன்புடனும்,அரவணைத்தும்  வளர்த்திடுங்கள் 
அவர்களின் உணர்விக்கும், சிந்தனைக்கும் மதிப்பு அளியுங்கள்,
பண்பு, பணிவு, நல்லொழுக்கம்,உழைப்பு, போன்ற நன்னெறிகளை 
மனதினில் வேருன்ற வைத்து, வளர்ப்பதே தாய் தந்தையரின் கடமை!

அடுப்பூதும் பெண்ணிற்கு   படிப்பு எதற்கு என எண்ணாதீர் 
கல்வியே பெண்ணின் முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை
அகிலத்தில் சமூக  சிந்தனையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்
கல்வியே பெண்ணின் வாழ்க்கைக்கு பாதுகாப்பென நினையுங்கள் !

பெண் குழந்தைகள் சிறந்தவர்கள் ஆவது தாய்தந்தையின் வளர்ப்பினிலே 
வாழ்கையில், நன்னெறிகளை மேற்கொள்ள அவர்களுக்கு வழிகாட்டுங்கள் 
பெண்கள் அழகுப் பதுமைகள் அல்ல, அவர்கள் அறிவின்  ஜோதிகள் 
பெண்ணின் பெருமையை வள்ளுவன் வழிகொண்டு நடத்துவோம் !


ரா.பார்த்தசாரதி




சனி, 11 அக்டோபர், 2014

தித்திக்கும் தீபாவளி



                                                         தித்திக்கும் தீபாவளி


மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,
எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி 
வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,
இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,
புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !

வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே 
வெடியின் சப்தமும், சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பினை காண்போமே,
மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே,
சங்கு சக்கரம், புஸ்வாணப்  பூக்களின் சிதறலை கண்டு களிப்போமே !

அசுரன்  நினைவாக  நாம்   தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றோம் 
மனித உருவில் உள்ள அசுரர்களை  அழிக்க நாம் திட்டமிடுவோம்,
பார்வையற்றவர்கள் விடுதிக்கும், முதியோர் இல்லத்திற்கும்   செல்வோமே 
அவர்களுடன் இனிப்பினை பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!


ரா.பார்த்தசாரதி

சனி, 4 அக்டோபர், 2014

காந்தி கல்லாகி விட்டார்



                                                  காந்தி   கல்லாகி விட்டார்


உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன் 
நேர்மை எங்கே என்று எல்லோரிடந்திலும் கேட்பேன் 
எளிமை எங்கே என தேடி அலைந்து கொண்டிருப்பேன் 
தூய்மை  எங்கே என மனம் குமுறி துடித்துபோவேன் !

சத்யதிற்கே ஒரு சத்யசோதனையா என எண்ணிடுவேன் 
அகிம்சை  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன் 
மனித நேயத்தை இந்ந்நாட்டில் எங்கே என்று கேட்பேன் 
நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன் !

அன்று வெள்ளையரை வெளியேற அமைதி போரை துவக்கினேன் 
இன்று மக்கள் தண்ணீருக்காக போராட்டத்தை நடத்துகிறார்களே 
எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே 
நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே !

நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின்விடுதலைக்காகவே 
இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே 
என்னை தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே 
என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே!

என் மதிப்பு, என் தலை, ரூபாய் நோட்டின் முகப்பிலே ,
என் கொள்கைகள் எல்லாம் வீசபடுகின்றதே தெருவிலே,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றேனே 
இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே !


ரா. பார்த்தசாரதி