என்ன தெரியும் ! என்ன தெரியாது !
ருஷில், அக்சத் ரியன், கேசவ் இவர்களுக்கு என்ன தெரியும்! என்ன தெரியாது!
இவர்களின் தாய், தந்தையர்க்கு என்ன தெரியும் ! என்ன தெரியாது !
இது ஒரு உரைநடை உரையாடல் !
1. பசி, தூக்கம் வந்தால் எங்களுக்கு அழ தெரியும் !
உங்கள் கஷ்டங்கள் பற்றியும், வரவு,செலவு பற்றி எங்களுக்கு தெரியாது !
2. நாங்கள் கேட்டதை உடனே வாங்கி கொடுக்கவேண்டும் !
எங்களுக்கு சாப்பிடும் பொருளின் விலை பற்றி தெரியாது !
3. எங்களுக்கு அப்பா, அம்மாதான் முக்கியம் என்று தெரியும் !
எங்களுக்கு மற்றவர்களிடம், உயர்வு, தாழ்வு தெரியாது !
4. எங்களுடைய சிரிப்பினை தானமாக கொடுக்கதெரியும் !
எங்களுக்கு பயம், கவலை என்பது என்னவென்று தெரியாது !
5. எங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது என்று தெரியும் !
எங்களுக்கு இப்பொழுது, எதிர்காலம், வருங்காலம் பற்றி தெரியாது !
6.எங்களுக்கு எந்த பொருளையும், கடிக்கவும்,உடைக்கவும் தெரியும் !
நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும், விலையும் தெரியாது !
7.எங்கள் எதிர்காலத்தை பற்றி, மனகோட்டை கட்டுவீர்கள் என்பது தெரியும் !
எங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன என்பதே எங்களுக்கு தெரியாது !
8. உங்கள் வேலையே உங்களுக்கு முக்கியம் !
எங்கள் விளையாட்டே எங்களுக்கு முக்கியம் !
9. அம்மா, அப்பா வேலைக்கு செல்கிறார்கள் என்று தெரியும் !
குழந்தை காப்பகமும் , தாதா பாட்டியும் அடைக்கலம் என்று தெரியாது !
10. வேலைக்கு செல்லாத அம்மாவே, நல்ல அம்மா என்று தெரியும் !
டிவிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்கு தெரியாது !
11.விளையாட்டும் குறும்பும் சில காலங்களே என்று உங்களுக்கு தெரியும்!
சில வருடமே, எங்கள் இஷ்டதிர்க்கு அனுமதிப்பிர்கள் என்று தெரியாது !,
12. எல்லா குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழநதைகளே !
அவர்கள் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும், தாய், தந்தை வளர்ப்பினிலே !
ரா. பார்த்தசாரதி
குறிப்பு: அடுத்து வருவது ருஷில், அக்சத் , ரியன், கேஷவ் இவர்கள்
'"கவிதை எழுதினால் "'