எங்கே அவள் ?
பூத்த விழிகள் கதை பேச பூங்காற்று மெல்லசைய
மண்ணைப் பார்த்து நடக்கும் அவள் அழகை காண
பூமியும் கூட அவளை காதலித்து விடுமோ என பயந்தேன்
நல்லவேளை பூமியும் ஒரு பெண்தானே என ஆறுதலடைந்தேன்
விரல் பிடித்து என்னுடன் வருவாய் என நினைத்தேன்
விலகிச் செல்வாய் என்று தெரிந்திருந்தால்
உன் விரல் அல்ல, என் உயிர் என்றே நினைப்பேன்
யாரோடு வாழ முடியுமோ அவளோடு வாழ்வதல்ல வாழ்க்கை
யாரின்றி வாழ முடியாதோ அவளுடன் வாழ்வதே வாழ்க்கை
இருகை சேர்ந்தால்தான் வாழ்க்கை என அவள் அறிவாளா !
இரு இதயங்களின் சங்கமம் என தெளிவாளா
இரு விழிகளின் நேசமே, எங்கள் காதல் தேசம் என அறிவாளா !