மங்கள விநாயகனே
விநாயகனே, என்றும் வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே , வேலவனுக்கு மூத்தவனே
ஞான முதல்வனே, கணங்களின் தலைவனே
செய்யும் தொழிலுக்கு ஆதாரமாய் முன்னிற்பவனே
வெற்றிக்கு வழிவகுக்கும் வெற்றி விநாயகனே
மண்ணிலும், மஞ்சளிலும் உருவமாய் திகழ்பவனே
காட்சிக்கு எளியவனாய், தெருவெங்கும் அமர்ந்தவனே
மூலப்பரம்பொருளே, மூழிக வாகனனே
புத்திக்கு வித்தாகும் சித்தி விநாயகனே
காக்கும் கடவுளாய், கணேசனாய் நிற்பவனே
கவலைகள் அகல துணையாய் இருப்பவனே
மெட்ரோஸ்னில் குடியிருக்கும் ஆனந்த விநாயகனே
எல்லோரும் ஆனந்தமாய் வாழ அருள் செய்பவனே !
ரா.பார்த்தசாரதி 8148111951