வெள்ளி, 11 மார்ச், 2022

 


                                                                   எங்கே   அவள் 

       1,  அன்பால்  அரவணைக்கும்   அன்னை     அவள் !
     2   பொறுமையின் புகலிடமாய்  இருப்பதும்  அவள் !
     3.  இலவாழ்க்கையில்  இனிமை சேர்ப்பதும்    அவள் !
      4/  தன்னுயிரை  பணயம் வைத்து உயிர் கொடுப்பதும்  அவள்  
     5.  தமையனுக்காக    தாங்கும்  தங்கை   அவள்  !
    6   சுமைகளை  சுகமாய்    தாங்குவதும்     அவள்  !
   7   மனத்தால்  மயக்கும்  மனைவி  அவள் !
  8.   கண்களால்  கவரும்  காதலி   அவள்  !
  9   பிள்ளைக்கும், கணவனுக்கும் பாலமாய் இருப்பதும்  அவள் !
 10   குடும்பத்தில்  பல பதவிகளை  வகிப்பதும்    அவள் !
11  எதிர்நீச்சல் போட்டு சாதிப்பதும்  அவள் !
12. தியாகத்தின் திருவுருவாய்  திகழ்பவள்   அவள் !

    மங்கையராய்  பிறப்பதற்கு  மாதவம் செய்திடவேண்டும் 
    மாநிலத்தில்  மாட்சிமை  பெற்று  விளங்கிட வேண்டும் 
   மகளிர் தினத்தை ஆண்டுக்கு, ஆண்டு போற்றிட வேண்டும் 

   எழுதியவர் :  பாலா  

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக