வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞ்சர் கருணாநிதி



                                       

                                                கலைஞ்சர்  கருணாநிதி


 உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே என்று அழைக்கும் தலைவா
 இனி.  அந்த காந்த குரல் கடற்கரை காற்றில்  கலந்து விட்டதா
 உலக தமிழரின் உயிர் மூச்சே,  சுண்டி இழுத்தது உன் பேச்சே
 ஒன்றா, இரண்டா உன் சாதனை, ஏட்டில் அடங்கா உன் போதனை !

 உதயசூரியன் மறைந்து விட்டது, இதய காவியம் இறந்துவிட்டது \
 உன்  கவிதையும்,வசனமும் மனத்தினில் நின்று நிழலாடுது 
 உன் குறளோவியமோ வள்ளுவனேயே  நினைக்ச்  செய்கின்றது  
வள்ளுவர்கோட்ட குறள்  ஓவியமே, நீ என்றும் நிலைத்த காவியமே!

 உன் பேனா குனித்தாலும் உன் எழுத்துக்கள் நிமிர்ந்தே நிற்கின்றது 
 தமிழே  உன்னால்  செம்மொழியாய் சிறப்புடன் உலகில் திகழ்கின்றது 
 தமிழின் பெருமையை உலக தமிழ் மாநாட்டால்  சிறப்புற செய்தாய் 
 மெரினாவில் அண்ணாவின் பக்கத்திலேயே  இடம் பிடித்தாய் !  

 கலைஞ்சன்  இருக்கும்போது யாரும்  அவர் செய்ததை  புகழ்வதில்லை  
 அவர் இறக்கும்போது யாரும் அவரை புகழாமல்  இருந்ததில்லை  
 உன் போல் எந்த தலைவனுக்கும், உலகமே  அழுததில்லை 
 உயிர் பிச்சை கேட்டு இறைவனை என்றும் தொழுததில்லை

உன்னைப்போல், சொல்வல்லன் சோர்வு அடைவதில்லை 
உன் சொல்லாலே எதிரியை வீழ்த்த என்றும் தயங்குவதில்லை 
தடைக்கற்கள் உண்டெனினும் தடத்தோள்கள் உண்டு என்றவரே 
எதிர்த்து நின்றரோர்  தமையெல்லாம் எளிதாக வென்றவரே !

முத்துவேலர்,அஞ்சுகம் பெற்று எடுத்த முத்தமிழ் காவலரே 
அரசியலிலும் சாதனை படைத்து, இன்று சரித்திரமானாய் 
உன் திறமையால், உன்னத தலைவனாய் உருவெடுத்தாய் 
உன் இடம் வெற்றிடமே, உன்னை என்றும் மறவாது தமிழினமே !


ரா.பார்த்தசாரதி 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக