சனி, 25 ஜனவரி, 2025

Kudiyarasu dinam 2025

,  , 

                                     குடியரசு தினம்  26   2025.

 இன்று 75 ஆண்டுகள் முடிந்து 76 வது ஆண்டில் கால்  அடியெடுத்து 
 வைக்கின்றோம்  !
இன்று நாட்டின் நிலைமை என்ன ? 
 ஒரு பக்கம் வேலையின்மை,  விவசாயிகளின் போராட்டம் 
பண வீக்கம், இந்திய நாட்டு பணம்  அந்நிய செலவாணியில் மதிப்பிழுப்பு ,நடுத்தெரு மக்களும், ஏழைமக்களும் வாழ்வில் இறக்கம், நாளுக்குநாள்  உயர்ந்து வரும் விலைவாசி  வரிச்சுமை  இதுதான் இன்றைய நிலைமை.
1947 இல் சுதந்திரம் அடைந்தோம்.  1950 ஜனவரி 26ஆம் நாள் மாநிலங்களை  ஒரு குடைக்கீழ் அமைத்து ஜனநாயக குடியரசு அமைத்தோம் . எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சட்டம் கொண்டுவந்து 75 ஆண்டுகளாக இந்திய பார்லிமென்ட்  கான்ஸ்டிடூஷன் சட்ட படி ஜனநாயக  ஆட்சி நடை 
பெற்று வருகிறது.  மக்களே நாம் சற்றே சிந்தித்து பார்ப்போம்  
 சபதம் ஏற்போம்  !  ஆம் 

அடிமை சங்கிலி தகர்த்து விடுதலைக்கு வித்திட்டு
குடியுரிமை பெற்று தந்த வீரத் தலைவர்களின்
பாதம் பணிவோம்!
சீர்மிகு இளைஞர்கள் கல்விதனில் சிறந்து நன்னெறிகள் காத்து வாழையடி வாழையாக தலைமுறை காக்கட்டும்!
நாட்டை சீரழிக்கும் பிரிவினைவாதிகளின் தீய சக்திகளை 
வீழ்த்தி  சமத்துவம் வித்திட்டு சம உரிமை பெறட்டும்!
மக்கள் நலன்களை போற்றுவோம், சனாதனம் பற்றி அறியாதவர்களை 
நாம் தூற்றுவோம். 

இயற்கை வளம் சூறையாடும் தேச விரோத ஒட்டுண்ணிகளை
மண்ணில் சாய்த்து மண் வளம் சிறக்கசட்டம் வலுப்பெறட்டும்!
புரையோடி கிடக்கும் ஊழலின் ஊற்றுக்கண் அடைத்து, 
மக்கள் நலன் காக்கும் நிர்வாகம் அமைய ஒன்றுபட்டு
எழுச்சி காணட்டும்!

நரம்புகள் புடைத்து வார்த்தைகள் தடித்து
இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மத தீவிரவாதத்தை
வேரோடு சாய்த்து இந்திய பேரரசின் மகத்துவம் போற்றட்டும்!

அகிம்சை வென்றது குடியுரிமை கிடைத்தது தனி சட்டம் உருவானது. ஒற்றுமை கனிந்தது காலத்தை வென்று
தலைமுறை காக்கும்! பண்பாடு சிறக்கட்டும்!
ஒற்றுமை நிலைக்கட்டும் மக்கள் நலன் சிறக்கட்டும்
தேசிய கொடி பறக்கட்டும் தேச பக்தி ஒளிரட்டும்
தேசியம் ஓங்கட்டும்!

மக்களே ! இலவசங்களை கண்டு ஏமாறாதீர்கள் ! சிந்தித்து செயல் 
படுங்கள். மக்கள் நலன் போற்றும்  நல்லவர்களுக்கு வாக்களித்து, பணத்திற்காக உங்கள் ஓட்டை பிச்சையிடாதீர்கள் !
குடியரசு தின நன்நாளில் நாம் சபதம் ஏற்போம்!  நன்றி ! வணக்கம் !

ரா.பார்த்தசாரதி .


வெள்ளி, 10 ஜனவரி, 2025


                                                 

                                                                       இதயமே !! என்றும் மறவாதே 

                            கையளவு  கடவுள், இதயம் வைத்தான்     
                           கடல் அளவு மனிதனுக்கு ஆசை வைத்தான்  !

                            இதயமே ! நீ எழுதிக்கொள் 
                            தீயவற்றை என்றும் காண மறுக்கின்றாய் 

                            இதயமே ! நீ எழுதிக்கொள் 
                           நீ மனதினால் நம்பிக்கை கொள்கிறாய் !

                           இதயமே! நீ எழுதிக்கொள் 
                          ஒரு கூண்டுக்குள் இருந்து என்னை இயக்குகிறாய்

                           இதயமே ! நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொரு நாளும் சிறந்த நாளென்று !

                            இதயமே ! நீ எழுதிக்கொள் 
                            ஒவ்வொருநேரமும், சிறந்த நேரமென்று !

                           இதயமே! நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொரு வேலையும் சிறந்த வேலையென்று 

                           இதயமே நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொருஉறவும் சிறந்த உறவென்று !

                          இதயமே நீ எழுதிக்கொள் 
                          ஒவ்வொரு நட்பும் சிறந்த நட்பென்று !

                          இதயமே நீ எழுதிக்கொள் 
                          ஒவ்வொரு உதவியும் சிறந்த உதவியென்று !

                          இதயமே நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொரு முயற்சியும் சிறந்த முயற்சியென்று !
                    
                          இதயமே நீ எழுதிக்கொள் 
                          ஒவ்வொரு தர்மமும், சிறந்த தர்மமெண்று !

                         இதயமே நீ எழுதிக்கொள் 
                         இதயமில்லாதவனை கல்நெஞ்சன் என நினைக்காதே 
                          கல்லுக்குள் ஈரம் உண்டு என்பதை என்றும் மறவாதே !
                         
                        ரா.பார்த்தசாரதி