ஸ்ரீ கிருஷ்ணாவின் நிச்சியதார்த்தம்
இடம்: ராதா கிருஷ்ண மந்திர தேதி: 26 மே 2022
லீ மாண்ட , இல்லிநாய்ஸ் 60439
2. ருக்மணி,சத்யபாமா சமேத வேணுகோபாலஸ்வாமி அருளால்
ராதாகிருஷ்ணா மந்திரில் ஓர் நிச்சியதார்த்த மேடை !
2. திருமதி லதா திரு சுரேஷின் புதல்வன் ஸ்ரீகிருஷ்ணாவிற்கும்
சௌபாக்கியவதி ஷீட்டலுக்கும் நிச்சியதார்தம் இன்று
3. இது கடவுள் அமைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை
இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே அன்று .
4 காலம், தேதி, இடம் முடிவுசெய்வதும் நிச்சியதார்தமே
இறைவன் நாமங்கள்சொல்லி லக்னபத்திரிகை வாசிக்கப்படுமே !
5. இருவீட்டாரும் சேர்ந்து நடந்திடும் நிச்சியதார்த்த விழா
உற்றார், உறவினர் சேர்ந்து நடந்திடும் விழா !
6 வாழ்க்கைத் துணைநலம் நாடும் ஸ்ரீகிருஷ்ணா எனும் ஆடவனே
என்றும் அமெரிக்காவில் ஷீட்டலுடன் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே !
7 நகமும், சதையும் ( Bone & Skin) போல் இருந்திட வேண்டும் 1
இரு கைகள் சேர்ந்தால்தான் வாழ்க்கை என அறிந்திட வேண்டும் !
8 திருமணம் என்பது இருமனம் அல்ல
அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம் !
9 திருமதி ஒரு வெகுமதி என அழைப்பது பழக்கம்
திருமதீயின் பெயரோ ஷீட்டல் என அழைப்பது வழக்கம் !
10 காலமும், காட்சிகளும் வாழ்க்கையில் என்றும் மாறும்
கணவன், மனைவி என்ற உறவே என்றும் நிலைத்து வாழும் !
11 பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும்
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !
12/ மலர் போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்ப்பெண்ணே
மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே !
13 நிச்சியதார்தம் என்றாலே உற்றார், உறவினர் ஆசியே !
அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர் ஆசியே !
14 ராதாகிருஷ்ணா மந்திரில் இருவீட்டாரும் சிறப்புற நடத்தினரே
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு,விருந்துண்டு மகிழ்ந்தனரே !
15 அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. என்பது வள்ளுவன் வாக்கு !
ரா.பார்த்தசாரதி