இந்தியக்குடியரசுதினம் - 26த் ஜனவரி 2022
எழுபத்திரெண்டாம் ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடுதே,சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைத்தோமோ
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை காண்கிறோமா?
மாநிலத்தின் தியாகிகளின் உருவங்கள் ஊர்வலமாக வந்திடுமோ
குடியரசு ஊர்வலத்தில் மாநில தியாகிகள் உருவம் மறுக்க பட்டதே
சிதம்பரனாரையும், பாரதியையும், வீரபாண்டி கட்டபொம்மன்
மருது சகோதரர்கள், வேலுநாச்சியாரையும் நாடு மறந்திடுமா
அந்தமானில் சுதந்திர தியாகிகள் பட்ட துன்பத்தை அறியுமா
அன்று சுதந்திர தியாகிகள் போட்ட பிச்சையினை மறந்திடலாமா
ஒற்றுமையை பாலமாக அமைக்காமல், சமயத்தால் துண்டாடலாமா
தான் வாழ பிறரை துன்புறுவதை கொள்கையாக கொள்ளலாமா
காழ்புணர்ச்சியால் தமிழகம், மற்ற இரு ,மாநிலத்தையும் மறக்கலாமா
ஒன்றிய அரசு தன்னிச்சையாய் மாநிலங்கள இழிவூபடுத்தலாமா
ஜனநாயகத்தில் அனுமதிக்கலாமா, நீதிபதிகள் சும்மா இருக்கலாமா
குடியரசு கொண்டாடும் சுதந்திர நாட்டில் நீதி, நியாயம் எங்கே !
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை எங்கே காண்கிறோமா?
சட்டங்களையும், சாசனங்களையும் அம்பேத்கர் சரிசெய்தார்
எல்லா மாநிலங்களையும், ஓர் குடை கீழ் கொண்டுவந்தார்
மத்திய, மாநில அரசும், வேறுபடாமல் பின்பற்ற செய்தார்
மக்களின் நலனுக்காகவே சட்டங்களை திருத்தச் சொன்னார் !
சட்டங்கள் எங்கு முடிகிறதோ,அங்கே கொடுங்கோல் ஆட்சி
இன்றைய விவசாய சட்டங்களே இதற்கு ஒரு சாட்சி
இன்று மேல்வர்க்கத்திற்கும், கீழ் வர்க்கத்திற்கும் ஒரு சட்டம்,
என்று தீருமோ, மாறுமோ இந்த அடிமைப்படுத்தும் சட்டம் !
விவசாய நாடு என்ற பெருமை ! விவாசியிக்கு உரிமை இல்லை
தான் விளைவிக்கும் பொருளுக்கு விலை கூற உரிமை இல்லை
அரசும் எல்லா பொருளுக்கும் விலை நிர்ணயசெய்யதயங்குதே
மாற்றான் தாயாகவும், எடுப்பார் கைப்பிள்ளையாக நடக்கின்றதே !
இயற்கை சீற்றம் அடைந்து பருவம் தவறி வெள்ம் பெருகியதே
விவசாயிகளின் பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியதே
அரசும் விவசாயிக்கு நஷ்டஈடு கொடுக்க தவறியதே
விவசாயின் வாழ்க்கை துன்பத்திற்கு ஆளானதே !
வடக்கில் ஒன்றுகூடி விவசாயச் சட்டத்தை எதிர்க்குதே
மற்ற மாநிலங்களின் விவசாயிகளும் இதற்க்கு ஒத்துழைக்குதே
மத்திய அரசுக்கும், மாநிலத்திற்கும்,பனிப்போர் மூளுதே
விவசாயிகளின் எதிர்ப்பை கருதி, விவசாய சட்டத்தை விலக்கியதே
குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே
ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
மொழிகள் பலவாயினும் தேசம் ஒன்றே என நினைக்குதே !
நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதிர்கள்
நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே
ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
மொழிகள் பலவாயினும் தேசம் ஒன்றே என நினைக்குதே !
நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதிர்கள்
நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ,
நாடு வளம்பெற ஒற்றுமையுடன் பாடுபடுவோமே,
நாடு வளம்பெற ஒற்றுமையுடன் பாடுபடுவோமே,
பிற நாட்டிற்கு எடுத்துகாட்டாய் என்றும் விளங்குவோமே !
ஜனநாயகத்தின் குடைகீழ் வளர்ந்து வரும் நாடு ,
கலாசாரத்திலும், ஆன்மிகத்திலும், சிறந்த நாடு ,
பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
இணையற்ற சந்ததியுடன் திகழும் இந்தியா எனும் நாடு!
ரா.பார்த்தசாரதி