குழந்தைகள் தினம்
செடியில் மலரும் பூவும் அழகு
குழந்தைகளின் மழலை அதை விட மிக அழகு
கள்ளம், கபடம் இல்லாத ஜீவன் ஒன்று
புன்சிரிப்பால் நம்மை மகிழ்விப்பதும் ஒன்று
குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று,
குற்றங்களை, மறந்துவிடும் மனத்தால் ஒன்று
குழந்தைகளை தனக்கு பிடிக்குமென நேருசொன்னாரே
தன பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக அறிவித்தாரே!
வளர்ந்தால் தினமும் பள்ளிக்கூடம் செல்லவேண்டும்
சுமையில்லா புத்தகங்கள் கொண்டு செல்லவேண்டும்
சுவையான பாடமும், கதைகளும் வேண்டும்
அடிக்காத ஆசிரியர் என்றும் வேண்டும்
பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் !
குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடவேண்டும் !
ரா.பார்த்தசாரதி