பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீ நீடு வாழ வேண்டும்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும
நீ நீடு வாழ வேண்டும
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும் கைக்கொள்ளவேண்டும்
நன்மை செய்து புண்ணியத்தை என்றும் சேர்க்கவேண்டும்
எட்டு திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழுத வேண்டும
நிலவுத் தாளில் எழுத வேண்டும
உறவையும், நட்பையும் பேண வேண்டும்
பாசமும், நேசமும் வளர்த்திட வேண்டும்
வாழ்த்த வயதில்லை ஆனாலும்
கரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன்
பிறந்த நாள் வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ரா.பார்த்தசாரதி