காந்தி கல்லாகி விட்டார்
உண்மை எங்கே விலை போயிற்று எனத் தேடுவேன்
நேர்மை எங்கே என்று எல்லோரிடந்திலும் கேட்பேன்
எளிமை எங்கே என தேடி அலைந்து கொண்டிருப்பேன்
தூய்மை எங்கே என மனம் குமுறி துடித்துபோவேன் !
சத்யதிற்கே ஒரு சத்யசோதனையா என எண்ணிடுவேன்
அகிம்சை என்ற வார்த்தை காணாமல் போயிற்றே என்பேன்
மனித நேயத்தை இந்ந்நாட்டில் எங்கே என்று கேட்பேன்
நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன் !
அன்று வெள்ளையரை வெளியேற அமைதி போரை துவக்கினேன்
இன்று மக்கள் தண்ணீருக்காக போராட்டம் நடக்கின்றதே
எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே
நிலைகெட்ட அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே !
நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின்விடுதலைக்காகவே
இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே
என்னை தந்தையாக நினைத்த இந்திய மக்களே
என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே!
என் மதிப்பு, என் தலை, ரூபாய் நோட்டின் முகப்பிலே ,
என் கொள்கைகள் எல்லாம் வீசபடுகின்றதே தெருவிலே,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றேனே
இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே !
ரா. பார்த்தசாரதி