வெள்ளி, 12 டிசம்பர், 2014
வியாழன், 11 டிசம்பர், 2014
தேசிய ஒற்றுமை தினம்
தேசிய ஒற்றுமை தினம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையெனில் அனைவர்க்கும் தாழ்வு ,
அவனியிலே அமைதி மட்டும் நிலவும் தினமாக நாம் ஒன்றுபடுவோமே
நதியால் இணைந்து, வேற்றுமையில் ஒற்றுமை காண நினைப்போமே
சுயநலங்கள், சூழ்ச்சிகள் மறையும் தினமாக கொண்டாடுவோமே!
மாநிலங்களுக்கு இடையே சமாதானம், தானமாய் கிடைக்ககாதோ
பிரிவினை எனும் முள் சிதைந்து ஒற்றுமை எனும் மலர் மலராதோ
மாநில ஆட்சியும், அதிகாரமும் மக்கள் நலதினமாக மாறாதோ,
மக்கள் குரலே மகேசன் குரல் என்று ஒலிக்கும் தினமாக மாறாதோ!
ஆட்சியும், அதிகாரமும், மக்களின் ஏக்கத்தை தீர்கட்டுமே
மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நட்பிணை வளர்த்துக் கொள்ளட்டுமே,
ஒற்றுமை மேம்பட தலைவர்கள் என்றும் பாடு படட்டுமே
இனம், மொழி கடந்து மாநிலங்கள் யாவும் ஒன்றுபடட்டுமே!
தேசிய ஒற்றுமை தினத்தை மாநிலமெங்கும் கொண்டாடுவோமே,
ஒற்றுமையை வளர்க்க தேசத் தலைவர்களை நினைவு கூறுவோமே
இதனை தேசிய ஒருமைபாட்டிற்கு எடுத்துகாட்டாக உரைப்போமே
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவோமே !
ரா. பார்த்தசாரதி
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)