குழந்தைகள் தினம்
குழந்தைகளை வரமாகவும், குல விளக்காகவும் கொண்டாடும் நம் நாடு
பெண் சிசுவை இரக்கமின்றி கொல்வதும் நம் நாடு
பெண் குழந்தைகளை சுமையாக நினைப்பதும் நம் நாடு .
காலபோக்கில் இதனை மாற்றியதும் நம் நாடு.
ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தும் ஓர் வாரிசு இல்லையெனில்
அச்சொத்துக்கள் யாரோ அனுபவிப்பர் ,
இதனைக்கண்டு அவர்கள் சுற்றத்தார்களும் பரிதவிப்பர்
இந்நிலைமை கண்டும் தத்து எடுக்க சிலர் தயங்குவர் !
தத்து எடுப்பதில் என்றும் தவறில்லை
நன் முறையில் வளர்த்தால் கேடு இல்லை,
அனாதை என்ற சொல்லை அகற்றிடுங்கள் ,
அதுவே உன் வாழ்க்கைக்கும் வழிகாட்டி என உணருங்கள்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என கொண்டாடுகிறோம்
பிரதமர் நேருவின் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம் இந்நாட்டினிலே
குழந்தைகளிடத்தில் அவர் கொண்ட அன்பினை மறக்க முடியுமா
நம் நாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் அவரை போற்றிடுமே!
குழல் இனிது யாழ் இனிது, என்ப தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் என்பது வள்ளுவன் வாக்கு,
குழந்தை செல்வம் வாழ்கையின் இன்றியமையாத செல்வமே
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க இத்தினத்தில் சபதம் எடுப்போமே !
ரா.பார்த்தசாரதி