சனி, 2 பிப்ரவரி, 2013



நினைக்கத்தெரிந்த  மனமே!

வாழ்கையின்  உண்மையான  சந்தோஷம், தாயிடம்  பார்த்த  பாசமா,

மகளிடமும், மகனிடமும்  உணர்ந்த  அன்பா,

சகோதரர்களின்   பிரியாத  உறவா,

இது  எந்த ரகம்  என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில்,

நம்மை  மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பேரன் ,பேத்தியின் கள்ளம் கபடமற்ற சிரிப்பா?

அவந்திகாவின்  வா, வாவென்று கூப்பிடும் அழகும், கள்ளமில்லா சிரிப்பும்   தாத்தாவும் , பாட்டியும்  நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்

இதுதான்  நேசமும் , பாசமும் கலந்த  உறவு.



 ரா..பார்த்தசாரதி