செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

kankanda deivam

 


         கண்கண்ட  தெய்வம் 

தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.
பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் 
உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?
உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே
என்   வளமே உன்  சிறப்பு
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 
அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.

   ரா. பார்த்தசாரதி.

புதன், 7 பிப்ரவரி, 2024

 


                                   சாய்ஸ்ரீ , வினோத்    

            கவிப்பரணியேறி  கலிங்கத்துப் பாடுகின்றேன் ,
            கேளுங்கள், கேளுங்கள் !
            ஆடிடும் அலையினில் ஏறிட்டும்  நுரையென
            பாடிடும்  பாட்டினில்  பண் ( இசை )  என, 

            எங்கள் தாய்மொழி தமிழில்
            மூன்றெழுத்திற்கு  என்றும் ஓர்  சிறப்புண்டு,
            மூத்தமிழ்  என்ற பெயருண்டு

            தாய் தன் பிள்ளைகளிடம்  காட்டும் பரிவே    அன்பு 
            அன்பிற்கும் மூன்றெழுதுதான்
            தந்தை தன்  மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு 
            அறிவிற்கும்   மூன்றெழுதுதான்   
            குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி 
            கல்விக்கும் மூன்றெழுதுதான்
            பக்தன் இறைவனிடம் கொள்வதோ  பக்தி
            பக்திக்கும்  மூன்றெழுதுதான்  
            கவிஞ்சன்   கவிதையை பாங்குற உரைப்பதே யுக்தி 
             யுக்திக்கும் மூன்றெழுதுதான்  
             குழந்தையின்  சிரிப்பே  மழலை 
             பூக்களின்   சிரிப்பே  மணம் 
             நாடு நலம் பெற வேண்டின்
             நாட வேண்டும் நல்லவர்  நட்பு 
             படை வீரர்கள்  திறமையே  வீரம் 
             பெண்டிர்க்கு  அணிகலனே   கற்பு 
             மனிதன் நல்லதை செய்ய தேவை  நல்ல மனம் 
             கைம்மாறு  எதிர்பாராமல் செய்வதோ வள்ளல் குணம   

             எங்கள் அன்பு செல்ல பெண் சாய்ஸ்ரீ  மூன்று எழுத்து 
             எங்கள் அன்பு மருமகன் வினோத்  மூன்று எழுத்து 
              அவர்கள் எல்லா செயல்களிலும்  வெற்றி  எனும் 
             மூன்றுஎழுத்தினை அடைய வேண்டும் .

             ரா.பார்த்தசாரதி - 8148111951
                 

                                 
             

சனி, 27 ஜனவரி, 2024

பெண்ணே நீதான்




                        

                      


                       பெண்ணே  நீதான் 

                       ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான் 

                       பாலுட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்,

                       என்னை  வயிற்றிலும், தோளிலும் , மடியிலும்  சுமந்தவள்  நீதான் 

                       என் தகப்பனை அடையாளம் காட்டியவள் நீதான் 

                       என் தாய் மொழியை  கற்று கொடுத்தவள் நீதான் 

                       அன்பு, பாசம்,  நேசம் என்னவென்று கற்றுக்கொடுத்தாய  நீதான் 

                       என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.

                       திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்

                       நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோ சனை கூறுபவளும் நீதான் 

                       நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான் 

                       மானிட  சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய்  இருப்பவளும் நீதான் 

                       குடும்பத்தில்  மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,

                       குடும்பத்தின் பல்கலைகழகமாய்    திகழ்பவளும்  நீதான் ,

                       பாரதி கண்ட  புதுமைப்  பெண்ணும்  நீதான் .

முகவுரை - 2

                                                    

                                     முகவுரை 

          கவிதை என்பது கண்ணாடியின் ப்ரதிபிம்மமே .  எண்ணத்திலே 
          எழும்   வார்த்தைகளை கொண்டு சொல்லோசையுடன் வடிப்பதே 
         கவிதையாகும்.   ஒன்றை பற்றி எழுதும் போது அவற்றை பற்றி 
          மனதிலே நினைவு கொண்டு அதற்காக எழும் வார்த்தைகளே 
          கவிதையாக உரு பெரும்.  கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை
          நடையும்,  சொல்லோசையுமே அதற்கு சிறப்பாக அமையும்.
         
          எல்லா கவிஞ்சர்களும் தனது மனதில் தோன்றியதையே
          வார்த்தைகளாக வடித்து கொடுப்பர்.   அந்தந்த சந்தர்ப்பத்திற்கு 
          ஏற்றவாறு, மனதிற் தோன்றியதையே பாடலாக எழுதுவதுண்டு !
         சினிமாப்பாடலுக்கும், நாடக பாடலுக்கும் வித்தியாசமுண்டு,
          கிராமங்களில் பாடும் கிராமிய பாட்டுக்கும், கூத்து பாட்டுக்கும் 
         வித்தியாசம் உள்ளது.  சிலது வசனநடையிலும், கிராமிய பாட்டு 
          அவர்களின் பண்பாடு, தொழில், விவசாயம் இவற்றை சார்ந்தே 
          வாய்ப்பாட்டாகவே பாடப்படும்,  இவற்றிக்கு அகராதிகள் 
          கிடையாது .  

          சினிமா பாடல்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறும், கதா நாயகன் 
          கதா நாயகியை  தொடர்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் 
          அமையும்.  அன்றைய பாடல்களில் கருத்தும், பொருளும் நன்கு 
          புரியும்.  இன்றைய பாடல்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்து 
          பாடல்கள் அமைத்துள்ளன . அன்று தூய தமிழில் பாடல்கள் 
          அமைந்தன . இன்று தமிழ் மொழியில் கலப்படங்கள் உள்ளன.

          என் கவிதைப்பூக்கள் அல்லது கவிதை திரட்டு என்று கூறலாம்
          இதன்  ஆசிரியர் ரா. பார்த்தசாரதி ஓர் இளநிலை பட்டதாரி. 
          பொருளாதாரத்தில்பட்டம் பெற்றாலும், தமிழில் ஆர்வம் உள்ளவர்.
          கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலின் 
          கடைசி பாகத்திற்கு அவருடன் இருந்து உதவி புரிந்து அந்நூல் 
          பூர்த்தி செய்வதற்கு காரணமாய் இருந்தார் . பூவுடன் கட்டிய 
          நார் மனப்பதை  போல அவருடன் இருந்த சில நாட்கள் என்னை 
          கவிதை எழுத என் மனம் தூண்டியது.  தினமலர் கவிதை உறவு  
          வல்லமை போன்றவற்றில்  பல கவிதைகள் எழுதியுள்ளார் 
          திரு.ரா. பார்த்தசாரதி (புனைப் பெயர், பாலா, இனியவன் என்ற 
          பெயரில்  சிறு கதைகள் கவிதைகள் எழுதியுள்ளார் . இந்நூலில்
          ஏதேனும்  தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.  இருந்தால் திருத்தி
         அமைத்துக்கொள்கிறேன் . ஆசிரியர் முடிவே தீர்மானிக்கப்படும்.
          என் கவிதைப்பூக்கள் என்கிற வலைத்தளத்தில், பல கவிதைகள் 
          திருமண வாழ்த்து மடல்கள்,காவியாஞ்சலி எழுதியுள்ளார்.  என் 
          கவிதைப் பூக்கள், இந்நூலை என்தாயின் ஆசியுடன் அவர் 
          பாதத்தில் வீழ்ந்து வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்!

          நன்றி .                                               
                                                                                         இப்படிக்கு 

                                                     கடல்மங்கலம், வங்கிபுரம் ரா.பார்த்தசாரதி 


வெள்ளி, 26 ஜனவரி, 2024

காதல் நாடகம்

  




                                 


                       


                                            காதல் நாடகம் 


           உன் அன்பும் நேசமும் என்னை உன் வசமாக்குமே  
           எல்லை மீறும் அன்பே என் செல்வம் ஆகுமே !

 நான் உன்னை பார்க்கும் போது விண்ணை பார்கின்றாயே 
 நான்  மண்ணை பார்க்கும் போது நீ என்னை நோக்குகின்றாயே !

           ஒரு முழம் பூவிற்குள் உன்னை களிப்புற செய்தேன் 
           என்னருகில் நீ இருந்தால் உலகமே சுழல்வதேன் !

           உன் கள்ளவிழி பார்வையில் மயங்கினேனே 
           என் இதயத்தை உன்னிடம் பறிகொடுத்தேனே !

           உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே ,
           கொள்ளும் இன்பமே, சொர்க்க வாழ்வினிலே !,
      
          திருமணம் எனும் பந்தலில் அன்புக்கைகள் சேருமே 
           மகிழ்ச்சி வெள்ளத்தில் இரு உள்ளங்கள் துள்ளுமே !

           இரவில் சிந்தும் தேனும் வாய்ச் சொல்லில்  ஊறுமே 
           தென்றல் வீசியே நம் வாழ்வில் இன்பம்  காணுமே 

           ரா.பார்த்தசாரதி 



           


வியாழன், 25 ஜனவரி, 2024

 



                   அயோத்தி ராமன் 

    ராமன் பிறந்ததும்  நவமியிலே 
   கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
   இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
   இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
   பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   குணத்திற்கும் நட்புக்கும்  இலக்கணமாய்  இருந்தவர் ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
   ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

  புனர்பூசம்  நக்ஷத்திரத்தில் பிறந்தவனே  
  அகலிகைக்கு சாபவிமோசனம்  அளித்தவனே
   சபரிக்கு அருள் செய்தவனே,பொறுமை மிக்கவனே 
   அனுமனை ஏற்றுக்கொண்டவனே. வாலியை அழித்தவனே !

   விபீஷணனை தம்பியாக ஏற்றுக்கொண்டவனே !
   ராவணனை அழித்து, சீதையை மீட்டவனே !
   அயோத்தியில் சிறந்த  அரசனாய்  ஆட்சிப் புரிந்தவனே  !
    தசரதனின் மூத்த மகனே, குணத்தில் சிகரம் போன்றவனே !

    அயோத்தியின் சக்கரவர்த்தியாய் நீதி தவறாதவனே  !
    சீதாராமனாகவும் .சக்கரவர்த்தி திருமகனாய் முடிசூடியவனே!
    லவன், குசன் என இரு மகன்களைப் பெற்றவனே 
    இறுதியில் பலருடன் வைகுண்டம் சென்றவனே !

அயோத்தி ராமன்

  



    



   அயோத்தி ராமன் 

    ராமன் பிறந்ததும்  நவமியிலே 
   கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
   இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
   இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
   பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   குணத்திற்கும் நட்புக்கும்  இலக்கணமாய்  இருந்தவர் ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
   ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

  புனர்பூசம்  நக்ஷத்திரத்தில் பிறந்தவனே  
  அகலிகைக்கு சாபவிமோசனம்  அளித்தவனே
   சபரிக்கு அருள் செய்தவனே,பொறுமை மிக்கவனே 
   அனுமனை ஏற்றுக்கொண்டவனே. வாலியை அழித்தவனே !

   விபீஷணனை தம்பியாக ஏற்றுக்கொண்டவனே !
   ராவணனை அழித்து, சீதையை மீட்டவனே !
   அயோத்தியில் சிறந்த  அரசனாய்  ஆட்சிப் புரிந்தவனே  !
    தசரதனின் மூத்த மகனே, குணத்தில் சிகரம் போன்றவனே !

    அயோத்தியின் சக்கரவர்த்தியாய் நீதி தவறாதவனே  !
    சீதாராமனாகவும் .சக்கரவர்த்தி திருமகனாய் முடிசூடியவனே!
    லவன், குசன் என இரு மகன்களைப் பெற்றவனே 
    இறுதியில் பலருடன் வைகுண்டம் சென்றவனே !